»   »  ஜேம்ஸ்பாண்ட் படத்தில் 'எப்'க்கும் கட்.. லிப்புக்கும் கட்: இந்திய சென்சார் போர்டு அதிரடி

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் 'எப்'க்கும் கட்.. லிப்புக்கும் கட்: இந்திய சென்சார் போர்டு அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டருக்கு இந்திய சென்சார் போர்டு யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. மேலும், பாண்ட் கொடுக்கும் உதட்டு முத்த காட்சிகளின் அளவை குறைத்து வெட்டி வீசியுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் கருத்துரிமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் வரிசை திரைப்படங்களில் தற்போது வெளியாகி சக்கைபோடு போட்டுவரும் திரைப்படம் ஸ்பெக்டர். உலகமெங்கும் வெற்றிநடைபோட்ட இப்படம் வரும் வெள்ளிக்கிழமை, இந்தியாவில் ரிலீசாகிறது.

James Bond will kiss less in India

இப்படத்துக்கு இந்திய சென்சார் வாரியம், யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளோடுதான் சர்டிபிகேட் தரப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெற்ற 4 முத்த காட்சிகள், 2 வசனங்கள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனவாம். அந்த கட் செய்யப்பட்ட காட்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும், டேனியல் கிரேக், நடிகைகளுக்கு நீண்ட நேரம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்திருந்தாராம்.

முத்த காட்சியை மொத்தமாக நீக்க கோராத, சென்சார் போர்டு, தேவையில்லாமல் நீண்ட நேரமாக, அவர் வாய் விளையாட்டு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது. எனவே, முத்தக்காட்சிகளின் நீளத்தில் சுமார் 50 சதவீதம் கட் செய்யப்பட்டுள்ளதாம்.

அதேபோல, ஆங்கிலத்தில் 'எப்' என்ற வார்த்தையில் தொடங்கும், வசனங்களும், 'ஏ' என்ற வார்த்தையில் தொடங்கி ஹோல் என்ற வார்த்தையில் முடியும், கட் செய்யப்பட்டுள்ளனவாம்.

இதனிடையே, சென்சார் வாரியம், இந்துமயமாகிவிட்டதாக கருத்துரிமைவாதிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகிறார்கள்.

எழுத்தாளரும், இயக்குநருமான, ஷ்ரிஷ் குண்டர் கூறுகையில், "ஜேம்ஸ்பாண்ட் உலகை காப்பாற்றுவார். ஆனால் ஜேம்ஸ்பாண்டை இந்திய சென்சார் போர்டிடம் இருந்து காப்பாற்றமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.

English summary
The new James Bond film Spectre has been cleared by the Censor Board Of Film Certification (CBFC) with a ‘UA' certification, but only after four cuts, two verbal and two visual. The visual cuts are both kisses, passionate as only James Bond's pecks can be.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil