ஷேவ் பண்ண சர்தாரை பார்த்து இருக்கீங்களா? தீபாவளிக்கு ஏகே61 படத்தோட செம கிளாஷ் இருக்கு!

சென்னை: தாடி வைத்து வயதான தோற்றத்தில் கார்த்தி இருக்கும் சர்தார் படத்தின் ஸ்டில்கள் மட்டுமே இதுவரை வெளியாகி வந்த நிலையில், க்ளீன் ஷேவ் பண்ணி காக்கி யூனிஃபார்மில் செம மிடுக்காக இருக்கும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் எந்தவொரு படமும் ரிலீசாகாத நிலையில், அடுத்த 6 மாதங்களில் அடுத்தடுத்து 3 பெரிய படங்களை ரிலீஸ் பண்ண ரெடியாகி உள்ளார் நடிகர் கார்த்தி.

விக்ரம் படத்திலும் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விரைவில் விருமன்

விரைவில் விருமன்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காஞ்ச பூவு கண்ணால பாடல் நாளை வெளியாகிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விருமன் திரைப்படம் திரைக்கு வருகிறது. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். கொம்பன் படத்திற்கு பிறகு மீண்டும் விருமன் படத்திலும் முத்தையா - கார்த்தி மேஜிக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தியத்தேவன் வறான்

வந்தியத்தேவன் வறான்

ஆகஸ்ட் 31ம் தேதி விருமன் வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த மாதமே மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் வானர குல வீரன் வந்தியத்தேவனாக கதையின் நாயகனாக நடித்துள்ளார் கார்த்தி.

தீபாவளிக்கு சர்தார்

தீபாவளிக்கு சர்தார்

இந்நிலையில், அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக கார்த்தியின் சர்தார் படமும் வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் கார்த்தி. மேலும், அவர் வெளியிட்டுள்ள சர்தார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஷேவ் பண்ண சர்தார்

ஷேவ் பண்ண சர்தார்

நீண்ட முடி மற்றும் தாடியுடன் வயதான தோற்றத்தில் கார்த்தியின் சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது க்ளீன் ஷேவ் செய்து கொண்டு காக்கி உடையில் கம்பீரமாக போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டும் கார்த்தியின் சர்தார் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. அதிலும் அந்த செல்போனில் மீடியாக்காரர்கள் கார்த்தி கலவரத்தில் பேசும் வீடியோவை எடுக்கும் காட்சி அட்டகாசம்.

அஜித்துடன் மோதல்

அஜித்துடன் மோதல்

எந்தவொரு பெரிய படத்துடனும் போட்டியில்லாமல் அஜித்தின் வலிமை படம் வெளியான நிலையிலும், படத்தின் மேக்கிங் சொதப்பிய நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே 61 திரைப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அஜித்துடன் மோத ரெடியாகி விட்டாரா கார்த்தி? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், எத்தனை படங்கள் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளப் போகின்றன என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X