பாகுபலி நாயகனுக்கு புதுசா வந்திருக்கும் ஆசை இதுதான்!
Recommended Video

சென்னை : 'பாகுபலி' பிரமாண்டப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். 'பாகுபலி' படத்திற்குப் பிறகும் அவரைத்தேடி அதே போன்ற சரித்திரக் கதைகள் வந்தன. சுதாரித்துக்கொண்ட பிரபாஸ் சரித்திரக் கதைகளுக்கு சிறிது பிரேக் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி, 'சாஹோ' படத்தில் கமிட்டானார்.
ரொமான்டிக் கதையாக உருவாகி வரும் 'சாஹோ' படத்தில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூருடன் நடித்து வருகிறார் பிரபாஸ். மேலும், இந்தப் படத்திற்காக தனது தோற்றத்தை ஸ்டைலிஷாக மாற்றி நடிக்கும் பிரபாஸ், அடுத்தடுத்து சில காதல் கதைகளில் நடிக்கப்போகிறாராம்.

ஆனால் அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு மாறுபட்ட காதல் கதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபாஸ். இன்னும் நிறைய மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அதனால் தற்போது வித்தியாசமான கதைகள் பக்கம் திரும்பியுள்ள அவர், இளம் இயக்குனர்களை அழைத்து தீவிரமாக கதை கேட்டு வருகிறார். பிரபாஸை இம்ப்ரஸ் செய்யும் விதமாக காதல் கதை சொல்லும் இயக்குநருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தனலானால், இருவருமே அதை மறுத்ததோடு, புதிய படங்களில் கமிட் ஆகி தங்களது துறையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











