»   »  ரஜினி பிரதமரா?, என்ன குடிபோதையில் இருக்கீங்களா?: இயக்குனரை விளாசிய நெட்டிசன்ஸ்

ரஜினி பிரதமரா?, என்ன குடிபோதையில் இருக்கீங்களா?: இயக்குனரை விளாசிய நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி பிரதமரா?- வீடியோ

ஹைதராபாத்: ரஜினி பற்றி ட்வீட்டிய இயக்குனரை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ அவரை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார்.

இது குறித்து அவர் ட்வீட்டியும் உள்ளார்.

பிரதமர்

ரஜினி பிரதமராகும்போது தான் இந்தியா அமெரிக்காவாக மாறும் என்று ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை பார்க்கும் போது அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா என்ற பல்லேலக்கா பாடல் வரி நினைவுக்கு வருகிறது.

போதையா?

ராம் கோபால் வர்மா நீங்கள் ட்வீட்டிய நேரத்தை பார்க்கும்போது ஏற்கனவே இரண்டு வோட்கா குடித்துவிட்டு, மேலும் 2 குடிப்பீர்கள் போலயே என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

போய்யா

ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களே கடுப்பாகியுள்ளனர். ஒருவரோ ட்விட்டரை விட்டு வெளியேறுமாறு கடுப்புடன் தெரிவித்துள்ளார்.

ஷாக்

இந்த ட்வீட்டை படித்தால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரே கன்பியூஸ் ஆகிவிடுவார் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'In the context of India’s position in entire world of some 200 countries only when superstarrajini becomes the PM of india is when India will become America by actually rising from http://2.zero to 200. zero'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil