For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடிச்சி கொடுமை படுத்துவாரு.. அந்த 8 வருஷமும் நரகம்.. சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி பகீர்!

  |

  மும்பை: சல்மான் கான் 57 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்காரே என பாலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தாலும், ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகளை காதலித்தும் குடும்பம் நடத்தியும் இருக்கிறார் சல்மான் கான் என அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.

  ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், அசீன் லேட்டஸ்ட்டாக பூஜா ஹெக்டே வரை சல்மான் கான் உடன் பல நடிகைகள் காதலில் விழுந்ததாக பேச்சுக்கள் அடிபட்டன.

  மான் வேட்டை ஆடி சிறைக்கு சென்று வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மாஸ் குறையாமல் இன்னமும் பிக் பாஸாக வாழ்ந்து வரும் சல்மான் கானை காதலித்த அந்த 8 ஆண்டுகளும் நரகம் என அவரது முன்னாள் காதலிகளில் ஒருவரான சோமி அலி பகீர் குற்றச்சாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

  எக்ஸ் கேர்ள் ஃபிரெண்டுக்கு பார்ட்டியில் முத்தம் கொடுத்த சல்மான் கான்.. பூஜா ஹெக்டேவும் பங்கேற்பு! எக்ஸ் கேர்ள் ஃபிரெண்டுக்கு பார்ட்டியில் முத்தம் கொடுத்த சல்மான் கான்.. பூஜா ஹெக்டேவும் பங்கேற்பு!

  பெரிய பிளேபாய்

  பெரிய பிளேபாய்

  சல்மான் கானை முரட்டு சிங்கிள் என சொன்னால் அது முரட்டு சிங்கிள் என்கிற வார்த்தைக்கே அசிங்கம் என பாலிவுட் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு வருகின்றனர். பல முன்னணி நடிகைகளுடன் காதல் மற்றும் லிவிங் டுகெதரில் இருந்து விட்டு திருமண பேச்சை எடுத்தால் மட்டும் வேண்டாம் என ஒதுக்கி விட்டு அடுத்த நடிகையை காதலிக்க சென்று விடுவார் சல்மான் கான் என அவரை பற்றி ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் பாலிவுட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

  பெரிய லிஸ்ட் இருக்கு

  பெரிய லிஸ்ட் இருக்கு

  சல்மான் கான் 57 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவரை காதலித்த நடிகைகள் பட்டியலில் பாலிவுட்டின் அனைத்து டாப் நடிகைகளின் பெயர்களும் கிட்டத்தட்ட இடம்பெற்று இருக்கும் என்கின்றனர். சோமி அலி, சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், அசீன், ஜாக்குலின் பெர்ணாண்டஸ் மற்றும் சமீப காலமாக பூஜா ஹெக்டேவும் சல்மான் கானும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சல்மான் கான் பிறந்தநாள் விழாவிலும் பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்.

  சோமி அலி குற்றச்சாட்டு

  சோமி அலி குற்றச்சாட்டு

  சல்மான் கான் மீது திடீரென நான் ஒன்றும் பொய்யான குற்றச்சாட்டுக்களை அடுக்கவில்லை. 90களின் நாளிதழ்களை எடுத்துப் பார்த்தாலே சோமி அலிக்கு சல்மான் கொடுத்த சித்ரவதைகள் பற்றிய கட்டுரைகள் ஏகப்பட்டது இருக்கும் என புதிதாக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டை போட்டு புயலை கிளப்பி உள்ளார் முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி.

  8 ஆண்டுகளும் நரகம்

  8 ஆண்டுகளும் நரகம்

  சல்மான் கானை 16 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவரை திருமணம் செய்து கொள்ளவே அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தேன். அவருடன் இணைந்து 'யார் கதர், தீஸ்ரா கவுன், சுப்' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் சல்மான் கான் என்னை உயிருக்கு உயிராக காதலிப்பது போலத்தான் இருந்தார். ஆனால், அதன் பின்னர் அடிப்பது, துன்புறுத்துவது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது, நண்பர்கள் முன்னிலையில் அசிங்கமாக திட்டுவது என எல்லை மீறினார். அவருடன் இருந்த 8 ஆண்டுகளும் என் வாழ்வில் நரகமான நாட்கள் என தனது இன்ஸ்டா பதிவில் பதிவிட்டு பகீர் கிளப்பி உள்ளார் சோமி அலி.

  குடும்ப வன்முறைக்கு எதிராக

  குடும்ப வன்முறைக்கு எதிராக

  பலாத்காரம் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சோமி அலி. குடும்ப வன்முறைகளை ஆணாதிக்கம் மிகுந்தவர்கள் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராகவே இந்த கருத்தை தான் பதிவு செய்கிறேன் எனக் கூறியுள்ளார். இதற்கு முன் பலமுறை சல்மான் கான் பற்றியும் அவரால் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் இவர் பதிவிட்டு அதனை உடனடியாக டெலிட் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

  English summary
  Salman Khan Ex Lover Somi Ali reveals her worst love experience with him in her recent instagram post shocks Bollywood fans. She reveals how Salman Khan tortures her and how he treated her in front of her friends in that post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X