For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ப்பா.. முட்டித் தெரிய ஜீன்ஸை கிழிச்சி விட்டுட்டு.. குத்தாட்டம் போட்ட ஷிவானி.. குவியும் லைக்ஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.

  பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியவர் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக சினிமாவில் அறிமுகமானார்.

  தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் மீண்டும் தனது ஹோம் கிரவுண்ட் ஆன இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோ போட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

  கார்த்திகை தீபத்தை விளக்குகளுடன் கொண்டாடிய ஷிவானி.. என்ன ஜொலி ஜொலிக்கறாங்க! கார்த்திகை தீபத்தை விளக்குகளுடன் கொண்டாடிய ஷிவானி.. என்ன ஜொலி ஜொலிக்கறாங்க!

  பிக் பாஸ் ஷிவானி

  பிக் பாஸ் ஷிவானி

  பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே சாலிடாக சவுண்ட் போட்டெல்லாம் கேம் விளையாடாமல் அழகு பதுமையாகவே விளையாடி வந்த ஷிவானி நாராயணன் வெளியேறுவதற்கு முன்னதாக பிசிக்கல் டாஸ்க் ஒன்றில் தனது திறமையை காட்டி சிங்கப்பெண்ணாக வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் அசீம் கூட ஷிவானி எல்லாம் எதுக்கு பிக் பாஸ் வீட்டுக்கு வந்தார் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

  பாலாவுடன் நெருக்கம்

  பாலாவுடன் நெருக்கம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் உடன் நட்பாக பழகி வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் பாலாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். ஷிவானி பர்த்டேக்கு பாலா செல்வதும், பாலா பர்த்டேக்கு ஷிவானி செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  சினிமா இன்னும் செட் ஆகல

  சினிமா இன்னும் செட் ஆகல

  விக்ரம் படத்தில் வாம்மா மின்னல் என சில சீன்களுக்கு மட்டுமே வந்து சென்றார் ஷிவானி நாராயணன். வீட்டுல விசேஷம் படத்துல ஒரு பாடலுக்கு நடனமாடி சென்றார். டிஎஸ்பி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சின்ன ரோலிலும், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கவர்ச்சி பொங்கவும் நடித்திருந்தார். ஆனால், 2 படங்களும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அடுத்து வெளியாக உள்ள பம்பர் படம் என்ன செய்யப் போகிறது என வெயிட் பண்ணி பார்ப்போம்..

  குத்தாட்டம் போட்ட ஷிவானி

  குத்தாட்டம் போட்ட ஷிவானி

  தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆகி வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள திடீரென ஒரு குத்தாட்ட வீடியோவை தற்போது நடிகை ஷிவானி நாராயணன் பதிவிட்டுள்ளார். "தன்னே தன்னே" எனும் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் பாடலுக்கு குதித்து குதித்து ஷிவானி நடனமாடி உள்ளார்.

  கிழிந்த ஜீன்ஸ்

  கிழிந்த ஜீன்ஸ்

  நடிகை ஷிவானி நாராயணன் முட்டித் தெரிய கிழிந்த ஜீன்ஸ் அணிந்து நடனமாடி உள்ள வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இதுக்குத்தான் அதிகமாக நாய் வளர்க்கக் கூடாது பாருங்க.. கண்ட இடத்தில் கடிச்சி வச்சிருக்கு என ஷிவானியை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தோல்வி கவலையை மறக்க இப்படி குதித்து டான்ஸ் ஆடுறீங்களா என்றும் நல்ல கதையை தேர்வு செய்து நடிங்க என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

  லாஸ்லியா போல

  லாஸ்லியா போல

  பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான லாஸ்லியாவுக்கும் இப்படித்தான் ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அவர் சரியாக கதையை தேர்வு செய்து நடிக்காமல் விட்ட நிலையில், அனைத்துமே ஃபிளாப் ஆகின. அதே போல நீங்களும் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்து விடாதீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil fame actress Shivani Narayanan dances for Thanne Thanne Song and shared a cute reels in her instagram page and getting more likes and hearts from her 3.5 million followers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X