பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்தினாரா சோம்? வைரலாகும் வீடியோ.. என்ன பாஸ் பித்தலாட்டம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் நோண்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று பலர் சொல்லி வரும் நிலையில், இந்த வீடியோவையும் அதற்கு ஆதாரம் ஆக்கி வருகின்றனர்.

என்ன பாஸ் பித்தலாட்டம் இதெல்லாம் என பிக் பாஸையும் அந்த நிகழ்ச்சியையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

செல்போன் அனுமதி இல்லை

செல்போன் அனுமதி இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் குடும்பத்தாரிடம் கூடவும் தனியாக பேச அனுமதி இல்லை என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையாக சொல்லப்படுகிறது. அதே போல, டிவி, செய்தித்தாள், ரேடியோ உள்ளிட்ட வெளி உலக தொடர்பு எதுவும் வழங்கப்பட மாட்டாது.

நிவர் புயலின் போதும்

நிவர் புயலின் போதும்

பிக் பாஸ் வீட்டில் இந்த முறை நிவர் புயல் காரணமாக வீட்டிற்குள் வெள்ளம் வந்த நிலையில், போட்டியாளர்களை பாதுகாப்பு கருதி தனியாக ஒரு இடத்தில் இரவு மட்டும் தங்க வைத்து மறு நாள் காலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினர். அப்போது கூட குடும்பத்தாரிடம் பிக் பாஸ் குழு மட்டுமே தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்பட்டது.

செல்போன் பயன்படுத்திய சோம்

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் கமல் சார் அனிதா சம்பத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது சோமசேகர் செல்போன் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அது தொடர்பான விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

கடுப்பான நெட்டிசன்ஸ்

கடுப்பான நெட்டிசன்ஸ்

என்னய்யா போன் யூஸ் பண்ணிட்டு இருக்கான் என அந்த வீடியோவை பார்த்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் கடுப்பாகி கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியே ஒரு ஸ்க்ரிப்டட் தானே, அதுல எல்லாம் பண்ணுவாங்க, மக்களை மொத்தமாக ஏமாத்தத்தான் ரூல்ஸ், கட்டுப்பாடு என ஏமாற்றுகிறார்கள் என விளாசி வருகின்றனர்.

நம்மள ஏமாத்திட்டாங்க மாம்ஸ்

நம்மள ஏமாத்திட்டாங்க மாம்ஸ்

இன்னொரு பிக் பாஸ் ரசிகர், நம்மள ஏமாத்திட்டாங்க மாம்ஸ் என பதிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டபடி திட்டி வருகிறார். மேலும், முதல் சீசனில் நடிகர் ஸ்ரீ செல்போன் பயன்படுத்தியதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். அதே போல போட்டியாளர்களுக்கும் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் கூறுகின்றனர். எல்லாமே செட்டப்பா!

பிட்டு மெஷின்

பிட்டு மெஷின்

மொபைல் போனா இருக்காது.. கமல் சார் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகிறார் என்றும், அதற்கு நாம என்ன மாதிரியான பதில் சொல்லணும் என்கிற பிட்டு மெஷினா இருக்கும். அதைத்தான் சோமசேகர் ஸ்வைப் பண்ணி பார்த்து படித்துக் கொண்டிருக்கிறார். எடிட்டர், கேமரா அந்த பக்கம் திரும்பியதை கவனிக்காமல் அந்த காட்சியை வைத்து விட்டார் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

சாம்பார் கறை

சாம்பார் கறை

வேட்டியில சாம்பார் கறை பட்டிருக்கும், அதை சொரண்டியிருப்பான், இவனுக வேற என இன்னொரு பிக் பாஸ் ரசிகர், பிக் பாஸ் வீட்டில் செல்போனுக்கு அனுமதியே கிடையாது என்பதை உறுதியாக கூறியுள்ளார். அட்ஜெஸ்ட்மென்ட் மேட்டர் மாதிரி இதையும் ரசிகர்கள் மறந்து விட்டு இன்னைக்கு ஷோவை பார்க்க வேண்டியது தான் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

திக்கக் கூடாது என்பதற்காக

திக்கக் கூடாது என்பதற்காக

திக்கக் கூடாது என்பதற்காக சோமசேகர் Stuttering கருவி பயன்படுத்தலாம் என்றும், அது அந்த கருவியாகத்தான் இருக்கும், இல்லை என்றால் பிளாஸ்மா டிவி ரிமோட், தண்ணி குடிச்சிட்டு வேஸ்டியில கையை துடைக்கிறார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் இந்த ஒரு சீனால் உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X