ஐரா

  ஐரா

  U/A | Drama
  Release Date : 28 Mar 2019
  3/5
  Critics Rating
  Audience Review
  ஐரா இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களிலும், கலையரசன், யோகி பாபு, ஜெயப்ரகாஷ் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தினை கே.ஜே.ஆர்  நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

  முதல் முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா. யமுனா, எல்லாத்தையும் பயமே இல்லாமல் எதிர்கொள்ளும் பத்திரிகையாளராகவும், பவானி வெள்ளந்தியான பயந்த சுபாவம் உடைய பெண்ணாகவும். பவானி பெரிய அளவுல பேசப்படும்...
  • சர்ஜுன் கேஎம்
   Director
  • கொட்டப்படி.ஜே.ராஜேஷ்
   Producer
  • சுந்தரமூர்த்தி கே எஸ்
   Music Director
  • பில்மிபீட்
   3/5
   யமுனாவை பவானி கொல்லத் துடிப்பதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. 'இதற்கெல்லாமா கொலை பண்ணுவாங்க' என்று தான் யோசிக்க வைக்கிறது. தில்லுக்கு துட்டு படத்தில் சந்தானம் பேசும் வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது.

   இரண்டாம் பாதியை போல், முதல் பாதி படத்தின் திரைக்கதையும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். மேலும், க்ளைமாக்ஸ் காட்சியை மிக எளிதாக யூகித்துவிட முடிகிறது.

   நிறைய புதிய விஷயங்களை யோசிக்கும் சர்ஜுன் க்ளைமாக்ஸையும் புதிதாக யோசித்திருக்கலாம். ப்ளாஷ் பேக்கை பார்த்து பவானி மீது ஏற்படும் அனுதாபம், தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது போய் விடுகிறது. பாத்திரப் படைப்பில் செலுத்திய கவனத்தை, கதையிலும், திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் 'ஐரா'வை நாமும் தோளில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம்...