X
கேப்டன்

கேப்டன்

Action | Sci - Fi | Thriller | 08 Sep 2022 | U/A | 116 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கேப்டன் கதை

கேப்டன் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அறிவியல் புனைவு திரைக்கதையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் ஆர்யா தனது ' தி ஷோ பீபில் ' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் ரசிக்கும் வண்ணத்தில் ஏலியன்ஸ் போன்ற உயிரினங்களை கொண்டு ஒரு அறிவியல் புனைவு சார்ந்த படமாக திரில்லர் & அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. கேப்டன் திரைப்படம் 2022, செப் 8ல் உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ' ரெட் கெய்ன்ட் மூவிஸ் ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார். கேப்டன் படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தகவல்கள் கேப்டன் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அணைத்து வீடியோக்கள் கேப்டன் படத்தின் புகைப்படங்கள் கேப்டன் படத்தின் கதை  எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் கேப்டன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) டீம் அதை முறியடித்து விடும். அப்படிப்பட்ட டீமுக்கு செக்டர் 42ல் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், அங்கே போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை என்பது தான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறிய செல்லும் ஆர்யாவின் டீம் minotaur எனும் ஒரு வகையான பிரேட்டரிடம் சிக்கிய நிலையில் தப்பித்ததா? இல்லையா? அந்த உயிரினம் அங்கு வர என்ன காரணம் என்பது தான் கேப்டன் படத்தின் கதை. கேப்டன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் கேப்டன் திரைப்படத்திற்கு முன்னர், இப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவான டெடி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ஹிட் அடித்துள்ளது. டெடி திரைப்படம் 2021 ஆம் ஆண்டு நேரடி ஓடிடி படமாக ' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ' ஓடிடி செயலியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. டெடி படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் இதே கூட்டணி அமைந்துள்ளது. இப்படம் நடிகர் ஆர்யா திரைவாழ்வில் இவர் நடிக்கும் 33வது திரைப்படமாகும். இப்படத்தின் தலைப்பு & அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக 2021, நவம்பர் 18ல் வெளியானது. டெடி, சர்பட்டா பரம்பரை போன்ற வெற்றி படைப்புகளுக்கு பின்னர் வெளியாகும் ஆர்யாவின் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்ரன், கோகுல் நாத், மாளவிகா அவினாஷ், ஆதித்ய மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகியுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது.
Read More

கேப்டன் நடிகர்கள் & படக்குழுவினர்

கேப்டன் அணியின் தகவல்

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன்
ஒளிப்பதிவாளர் யுவா
தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்
இசை டி இமான்
தயாரிப்பாளர் ஆர்யா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கேப்டன் விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
கேப்டன் - முயற்சிக்கு முதலில் பாராட்டுகள்
சினிஉலகம்
மொத்தத்தில் ரசிகர்களை கடுப்பேற்றி ஏமாற்றியுள்ளது கேப்டன்..
தினமலர் - சினிமா
கேப்டன் - ஆபரேசன் மிஸ்டு
பில்மிபீட்
மொத்தத்தில் ஆர்யாவின் கேப்டன் கரை சேருவது கஷ்டம்.

கேப்டன் ட்ரெய்லர்

Video Thumbnail

கேப்டன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கேப்டன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+