Don't Miss!
- News
மத்தியப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள்! ஆய்வில் ஏற்பட்ட உள்ள புதிய திருப்பம்
- Finance
ஆதார் கார்டு: NRI-களுக்கு ஆதார் ஏன் அவசியம்..? அப்ளை செய்வது எப்படி..?
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- Lifestyle
இந்த உணவுகளில் ஒன்றை காலையிலேயே சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்குமாம்!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
சந்தனம் கேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை.. விஜய் சேதுபதி நச் பதில்!
சென்னை : நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் விக்ரம்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக சந்தனம் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
அடுத்தடுத்து வில்லன், ஹீரோ என நடித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது டிஎஸ்பி படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த
வாரம்
பாக்ஸ்
ஆபிஸில்
கெத்து
காட்டிய
விஷ்ணு
விஷால்…
மோசம்
போன
விஜய்
சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி வருகிறது. தன்னை கோலிவுட்டில் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், டோலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது கத்ரினா கையிப்புடன் இணைந்து நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்களுக்கு வில்லன்
தமிழிலும் வில்லன், ஹீரோ என அடுத்தடுத்த கேரக்டர்களில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. விஜய், கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இடையில் மாமனிதன், டிஎஸ்பி என ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் மாமனிதன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது பொன்ராம் இயக்கத்தில் வெளியாகியுள்ள டிஎஸ்பி படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி
முன்னதாக கமல், பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்டவர்களுடன் விஜய் சேதுபதி நடித்திருந்த விக்ரம் படம் 400 கோடி ரூபாய்களுக்கும் மேலாக வசூல் மழை பொழிந்தது. படம் விமர்சன ரீதியாகவும் மிரட்டியது. இந்தப் படத்தில் சந்தனம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் அவர் இறுதியில் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும்.

தளபதி 67ல் விஜய் சேதுபதி?
ஆனால் அவர் காயங்களுடன் கீழே விழுந்து கிடப்பதாகவும் அவர் உண்மையில் விக்ரம் படத்தில் இறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்போது தளபதி 67 படத்தில் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். தளபதி 67 மற்றும் விக்ரம் 3 உள்ளிட்ட படங்களில் லோகேஷ் யூனிவர்சில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படும்நிலையில் இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெளிவுப் படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.

சந்தனம் கேரக்டரில் நடிக்க விரும்பவில்லை
தளபதி 67 படத்தில் தான் நடிப்பது குறித்து இதுவரை லோகேஷ் கனகராஜ் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டர் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். அந்த கேரக்டர் மீண்டும் வருவதை ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள் என்றும் அந்த கேரக்டர் மீண்டும் வருவதை தானும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள விஜய் சேதுபதி அந்த கேரக்டர் அவ்வளவுதான் என்றும் கூறியுள்ளார்.

டிஎஸ்பி படத்தின் சக்சஸ் பார்ட்டி
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது டிஎஸ்பி. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தில் தன்னுடைய வழக்கமான காமெடி தளத்திலிருந்து சீரியஸ் கதைக்களத்தில் விஜய் சேதுபதியை இயக்கியுள்ளார் பொன்ராம். இந்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், படத்தின் சக்சஸ் பார்ட்டியை பொன்ராமுடன் இணைந்து விஜய் சேதுதிபதி கேக் வெட்டி கொண்டாடினார்.