அடேங்கப்பா....ப்ரோமோவுக்கே இப்படி ஒரு மாஸா...பீஸ்ட் அரபிக்குத்தால் அதகளப்படும் ட்விட்டர்
சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் அப்டேட் தொடர்பான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ செம டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தொடர்ந்து இதை பாராட்டி வருகின்றனர்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பீஸ்ட் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கி விட்டதாகவும், ஏப்ரல் 14 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டது.

பிப்ரவரி 14ல் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள்
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி உள்ள இந்த பாடலை விஜய் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. அரபிக்குத்து என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கான மாஸான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

பாராட்டும் பிரபலங்கள்
நெல்சன் திலீப்குமார், அனிருத், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் சேர்ந்து பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளை தயார் செய்வது, விஜய்யிடம் போன் செய்து பாடி காட்டுவது போலவும் இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டை கேட்டு விஜய் கலாய்ப்பதாகவும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி அருண்விஜய், அபர்னாதாஸ்,தர்ஷன் உள்ளிட்ட பலரும் இதை பாராட்டி உள்ளனர். அரபிக்குத்திற்காக காத்திருப்பதாகவும் கூறி உள்ளனர்.

என்னது இத்தனை பார்வைகளா
அரபிக்குத்து பாடலின் ப்ரோமோ வீடியோ யூட்யூப்பில் வெளியாகி 16 மணி நேரத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர். அதோடு ThalapathyVijay, BeastFirstSingle போன்ற ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

ப்ரோமோவிற்கே இப்படியா
ப்ரோமோவிற்கே இத்தனை மில்லியன் பார்வைகள் என்றால் அடுத்த வாரம் வெளியாக போகும் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் இன்னும் எத்தனை மில்லியன் பார்வைகளை பெறுமோ, எத்தனை சாதனைகளை முறியடிக்குமோ என அனைவரும் ஆச்சரியமாக கூறி வருகிறார்கள். ஏற்கனவே பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள், வாத்தி கம்மிங் பாடலின் சாதனையை மிஞ்சியதாக இருக்கும், விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த குரலில் பாடிய பாடல் என பல விஷயங்களை சொல்லி ஹைப்பை எகிற வைத்திருந்தனர். இதில் மாஸான ப்ரோமோ வேறு வெளியிட்டு, எதிர்ப்பார்ப்பை பலமடங்கு அதிகரிக்க வைத்துள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் அரபிக்குத்து
நேற்று மாலை முதல் ட்விட்டர் டிரெண்டிங், ட்விட்டரில் அதிகமானவர்களால் பேசப்படுவது, பகிரப்படுவது என பார்த்தால் அது பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளிற்கான அரபிக்குத்து ப்ரோமோ தான். இந்த வீடியோவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. மீம்களும் கூட இதை வைத்தே உருவாக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











