Don't Miss!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- News
பாஜகவுக்கு ‘ஐடியா’வே இல்ல.. ஓபிஎஸ் இழுத்து விடுறார்.. மூல காரணமே அவர் தானாம்.. மாஜி சொல்லும் சேதி!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ப்பா.. பார்க்கவே கலக்கலா இருக்கே.. மேள தாளத்துடன் காரில் ஊர்வலம் வரும் பிக் பாஸ் ஷிவின்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் ப்ரோமோ வரலையே என ரசிகர்கள் மீண்டும் அந்த நேரத்துக்கு தேட ஆரம்பிப்பது இன்னும் கொஞ்சம் நாள் இருக்கத்தான் செய்யும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பக்கம் 24 மணி நேரத்தில் எப்போ வேண்டுமானாலும் சென்று பிக் பாஸ் ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில், அவர்களுக்கான என்டர்டெயின்மென்ட் ரொம்பவே மிஸ் ஆகும்.
அதையெல்லாம் சரி கட்ட சீக்கிரமே பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 ஆரம்பிக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
பிக் பாஸ் போட்டியாளரான விக்ரமன் ஒரு பக்கம் ரசிகர்களுடன் மாஸ் காட்டி வரும் நிலையில், இன்னொரு பக்கம் காரில் ஊர்வலமாக சென்ற ஷிவினின் வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
லெஜண்ட்
ரிட்டர்ன்...
ஷாருக்கான்
ரசிகர்கள்
கொண்டாட்டம்...
பதான்
ட்விட்டர்
விமர்சனம்
இதோ

பிக் பாஸ் சீசன் 6 ஓவர்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதுமே இந்த நிகழ்ச்சியில் பல புதுமுகங்கள் உள்ளன. நிகழ்ச்சியும் புதுசா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தது ஒரு குத்தமா என தெரியவில்லை. கிராண்ட் ஃபினாலே கூட ரொம்ப புதுசாவே மாறிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்ட அசீமுக்கு எதிரான் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

இரண்டுமே ஒரே மக்களா
அசீமுக்கு அதிக வாக்குகளை குவித்ததும் அசீமை தேசிய அளவில் ட்ரோல் செய்து வருவதும் ஒரே மக்களா என மீம்களே போடும் அளவுக்கு ட்ரோல்கள் தெறிக்கின்றன. ஆனால், பிஆர் வேலை தான் காரணம். அதனால் தான் மக்கள் விளாசி எடுக்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மாஸ் காட்டும் விக்ரமன்
பிக் பாஸ் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் மக்கள் மனங்களை விக்ரமன் வென்றுள்ளார். ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார் விக்ரமன். அரசியல்வாதியாக போகிறவருக்கு இப்படிப்பட்ட செல்வாக்கு இருக்கத்தானே செய்யும். எல்லாம் அந்த கட்சி செய்த ஏற்பாடாக இருக்கும் என அசீம் ஆர்மியினர் விக்ரமனுக்கு கிடைக்கும் மாலை, மரியாதையை எல்லாம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஷிவின் காரில் ஊர்வலம் வந்த ஷிவின்
இவங்க ரெண்டு பேருமே வேண்டாம். ஷிவினுக்கு பிக் பாஸ் டைட்டிலை கொடுங்க என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், சும்மா சொன்னா மட்டும் போதாது. அவங்க ஜெயிக்க ஓட்டும் போடணும் என கமல் சொன்னது போல ஷிவின் ரன்னர் அப் ஆக கூட தேர்வாகவில்லை. ஆனால், ஷிவினை அவரது ரசிகர்கள் காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டாடிய வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரோஜாப்பூ மாலை
காரில் பவனி வந்த ஷிவினுக்கு பிரம்மாண்டமான ரோஜாப்பூ மாலை அணிவித்து இருந்தனர். டைட்டிலை வெல்ல முடியாமல் செகண்ட் ரன்னர் அப் ஆனாலும், பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து இருக்கிறார் ஷிவின் என பலரும் பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக சினிமாவில் நடிப்பாரா? இல்லை என்ன செய்யப் போகிறார் ஷிவின் என கேள்விகள் எழுந்துள்ளன.

அல்டிமேட்டுக்கு வாங்க
பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 ஆரம்பித்தால் ஷிவின் பக்காவான போட்டியாளராக இருப்பார். நிச்சயம் அதில் கலந்து கொண்டால் டைட்டிலை ஷிவின் தட்டித் தூக்கலாம். பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு மிஸ் பண்ணாம வந்துடுங்க ஷிவின் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.