Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிக் பாஸ் வீட்டில் தல தீபாவளி.. அழகு பதுமைகளாக மாறிய போட்டியாளர்கள்.. ஷிவானி, ரம்யா வாவ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், ஏகப்பட்ட கொண்டாட்டங்களை தாங்கி வருகிறது.
Recommended Video
இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்கள் வெறும் சண்டைகளை மட்டும் போட்டுக் கொண்டு இருக்காமல் பரிசுகளையும், கொண்டாட்டங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டின் தல தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டதை உணர்த்தும் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரயோசனம் இல்லாத ஆட்டு தாடி.. எதுக்கு இந்த கேப்டன் பதவி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!
பிக் பாஸ் தீபாவளி
பிக் பாஸ் வீட்டில் இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே தீபாவளி டாஸ்க்குகள் அரங்கேறின. நேற்று, முன்னாள் போட்டியாளர்கள் வீடியோ கால் மூலமாக பங்கேற்று, இந்த சீசன் போட்டியாளர்களுக்கு போட்டிகளை நடத்தி பரிசுகளை கொடுத்தனர். இந்நிலையில், பிக் பாஸ் தீபாவளி புரமோ வெளியாகி உள்ளது.
செம அழகு
பிக் பாஸ் வீடு இன்னும் நிறைந்த சபையாகவே இருப்பதால், 8 பெண் போட்டியாளர்களும் அழகு மங்கைகளாகவும், ஆண் போட்டியாளர்கள் அதை விட அசத்தலாகவும் புத்தாடைகளை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடும் அட்டகாச புரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
டிஜே சோமு
ஒரு சின்ன டப்பா கிடைத்தால் போதும் அதை வைத்துக் கொண்டு மியூசிக் தட்டும் சோமசேகருக்கு, டிஜே மியூசிக் என சரியாக பரிசு வீலில் வந்துள்ளது. சோமசேகர் செம ஹேப்பியாகி புரமோவில் கத்துகிறார். அந்த லக்கி வீல் என்ன விளைவுகளையும் பரிசுகளையும் கொண்டு வருகிறது என்பதை நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
சனம்க்கு எலுமிச்சை
அரை எலுமிச்சை பழத்தை வைத்து அவ்வளவு பெரிய சண்டையை அர்ச்சனாவிடமும், பாலாவிடமும் போட்ட சனம் ஷெட்டிக்கும் சரியாக எலுமிச்சை பழம் வருகிறது. இதெல்லாம் பிளான் பண்ணி பண்ணவில்லை. ஸ்க்ரிப்ட் இல்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கதறினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
எல்லாமே ரியோ ஆகிட்டாங்க
இந்த சீசனில் டேக் இட் என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தினார் ரியோ. ஐஸ்வர்யா தத்தாவிடம் காதலை சொல்லும் போது, சோமசேகர் அந்த வார்த்தையை பயன்படுத்தினார். பிக் பாஸ் வீட்டு தீபாவளி வாழ்த்தை தெரிவிக்க ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ரியோவாக மாறி டேக் இட் என சொல்வது சிறப்பாக இருக்கிறது.