twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோட்டீஸ் அனுப்பிய டி.ராஜேந்தருக்கு பதிலடி கொடுத்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

    |

    சென்னை : நீண்ட இடைவெளிக்கு சிம்பு நடித்துள்ள மாநாடு படம் மிகப் பெரிய வெற்றி பெற்றள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். டைம் லூப்பை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக மாநாடு எடுக்கப்பட்டிருந்தது.

    இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்டோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். 100 கிலோ வரை உடல்எடை அதிகரித்திருந்த சிம்பு, மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்தார். சிம்புவின் உடல்எடை குறைப்பு, கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்து மாநாடு படம் தாமதமாகி வந்தது. பிறகு ஒரு வழியாக படத்தை முடித்தும் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

     சிம்புவின் 'மாநாடு’ படம்...டி.ராஜேந்தர் திடீர் வழக்கு சிம்புவின் 'மாநாடு’ படம்...டி.ராஜேந்தர் திடீர் வழக்கு

    கடும் நிதி நெருக்கடி

    கடும் நிதி நெருக்கடி

    ரிலீசுக்கு முதல் நாள் வரை ரிலீஸ் தேதியை உறுதி செய்ய முடியாத நிலையிலேயே படக்குழுவினர் இருந்தனர். மாநாடு ரிலீசுக்கு முன்பு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு நெருக்கடிகளை தான் சந்தித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே பல பேட்டிகளில் கூறி உள்ளார். சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தரும் கூட, மாநாடு படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் பலர் நெருக்கடிகள் கொடுப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

     தடைகளை தாண்டி ரிலீஸ்

    தடைகளை தாண்டி ரிலீஸ்

    பல பிரச்சனைகள், தடைகளை தாண்டி நவம்பர் 25 ம் தேதி மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.10 கோடி வரை வசூலானது. சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. படக்குழுவும் முதல் நாளே சக்சஸ் பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நோட்டீஸ் அனுப்பிய டி.ராஜேந்தர்

    நோட்டீஸ் அனுப்பிய டி.ராஜேந்தர்

    இந்நிலையில் எதிர்பாராத விதமாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீது வழக்கு தொடர்ந்து, நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விற்க விவகாரம் தொடர்பாக தான் டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம்.

    இது தான் பிரச்சனை

    இது தான் பிரச்சனை

    டி.ராஜேந்தர் அனுப்பி உள்ள நோட்டீசில், மாநாடு ரிலீசுக்கு முந்தைய நாள் வரை கடும் பைனான்ஸ் பிரச்சனை எதிர்கொள்ளப்பட்டது. இதனால் பைனான்சியர் உத்தம் சந்த், விற்கப்படாத ரூ.5 கோடி மதிப்பிலான சேட்டிலைட் உரிமத்திற்கு பொறுப்பேற்பதாகவும், ஒருவேளை சேட்டிலைட் உரிமம் ரூ.5 கோடிக்கும் குறைவான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு தான் பொறுப்பேற்றதாக டி.ராஜேந்தரிடம் கையெழுத்து பெற்று சென்றுள்ளார்.

    டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

    டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

    இந்த ஒப்பந்தத்திற்கு டி.ராஜேந்தர் தரப்பு ஒப்புக் கொண்டு, கையெழுத்திட்டதாலேயே மாநாடு படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மாநாடு படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது. இதனால் சுரேஷ் காமாட்சியும், உத்தம் சந்த்தும் தனக்கு தெரியாமலேயே சேட்டிலைட் உரிமத்தை மிகப் பெரிய தொகைக்கு விற்று விட்டதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Recommended Video

    Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat
    வெற்றிக்கு வழக்கா?

    வெற்றிக்கு வழக்கா?

    இந்த நோட்டீஸ் தொடர்பாக சுரேஷ் காமாட்சி ட்விட்டரில், வெற்றி கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது. கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    English summary
    Simbu's father T.Rajender sent legal notice to Maanaadu movie producer suresh kamatchi and financier Uttam chand on satellite rights. Now Suresh kamatchi reply to T.Rajender in twitter. fans supports suresh kamatchi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X