Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்?: நடிகர் விளக்கம்
Recommended Video
மும்பை: மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன் என்று நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.
52 வயதாகும் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தனது மகள் வயது பெண்ணான அங்கிதா கொன்வரை(26) இந்த மாத இறுதியில் திருமணம் செய்யப் போகிறார்.
இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
காதல்
நாங்கள் ஒன்றும் பிரியவில்லை, காதலித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை கூறுவது போன்று புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் மிலிந்த் சோமன்.
மிலிந்த் சோமன்
மகள் வயது பெண்ணுடன் காதல், திருமணமா என்கிறார்கள். எனக்கு மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களை பற்றி எதுவும் தெரியாது என்கிறார் மிலிந்த்.
சென்னை
மிலிந்த் சோமன் அங்கிதாவை முதல்முறையாக பார்த்தது சென்னையில் உள்ள நைட்கிளப் ஒன்றில் வைத்து தானாம். பார்த்த உடனே அங்கிதாவை பிடித்துப்போய் தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். வழக்கமாக நைட் கிளப் போகும் பழக்கம் இல்லாத அவர் அன்று அங்கு சென்றது நல்லதாகிவிட்டது என்று மிலிந்த் தெரிவித்துள்ளார்.
நட்பு
அங்கிதா மிலிந்த் நம்பர் கொடுத்த மறுநாளே கால் செய்து பேசியுள்ளார். அப்படியே பேசிப் பேசி நட்பாகி காதலாகியுள்ளது. 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகிறார்களாம். மிலிந்த் சோமனுடன் சேர்ந்த பிறகு அங்கிதாவும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.