twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாரிசு படத்தை விமர்சித்த இஸ்லாமிய பெண்ணுக்கு மிரட்டலா?ஏன் திடீர் மன்னிப்பு.. இயக்குநர் நவீன் ட்வீட்!

    |

    சென்னை : வாரிசு படம் பார்த்து விமர்சித்த இஸ்லாமிய பெண்ணுக்கு மிரட்டலா? என இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தில், ராஷ்மிகா,சரத்குமார்,பிரகாஷ் ராஜ்,ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    பொங்கல் பாண்டிகை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியான இப்படத்தை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

     எங்க வந்து யார்கிட்ட... துணிவு படத்தின் பிரேக்கில் வாரிசு பாடல்... சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள் எங்க வந்து யார்கிட்ட... துணிவு படத்தின் பிரேக்கில் வாரிசு பாடல்... சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள்

    விஜய்யின் வாரிசு

    விஜய்யின் வாரிசு

    காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக படங்களுக்கு பிறகு விஜய் கூட்டுக் குடும்ப கதையில் நடித்துள்ளார். திரையரங்கில் வெளியான இப்படத்தில், நக்கலான உடல்மொழி, குறுப்புத்தனமான பேச்சு என வேறுவிதமான விஜய்யைப் பார்க்க முடிந்தது. ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு சிங்கிள் ஷாட்டில் நடனம் அடி, திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போடவைத்துவிட்டார். தமனின் இசையும், பின்னணி இசையும் படத்துக்குப் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

    தமிழ்நாட்டின் வாரிசே விஜய் தான்

    தமிழ்நாட்டின் வாரிசே விஜய் தான்

    இந்நிலையில், வாரிசு படத்தை திரையரங்கில் பார்த்த இஸ்லாமிய பெண் ஒருவர், தமிழ்நாட்டின் வாரிசே அவர் தான், வேறயாருமே இல்லை. தளபதிக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நாங்க இருக்கிறோம் என்று பேட்டி அளித்திருந்தார். திரையரங்கில் உற்சாகமாக பேசிய அந்த பெண், திடீரென நான் பாவம் செய்து விட்டேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

    நான் பாவம் செய்துவிட்டேன்

    நான் பாவம் செய்துவிட்டேன்

    அந்த வீடியோவில், நான் ஒரு பாவத்தை செய்துவிட்டேன், அதற்காக அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன், அல்லா என்னை மன்னித்து விடுவார் என்று நம்பிக்கை உள்ளது. முஸ்லீம் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். இஸ்லாத்திற்கு எதிராக பாவத்தை செய்துவிட்டேன், அது எனக்கே தவறு என்று தெரிந்து அல்லாவிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். இனி அந்த பாவத்தை செய்ய மாட்டேன். நீங்களும் எனக்காக துவா செய்து இந்த பாவத்திலிருந்து என்னை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

    ஆணாதிக்கம் ஒழிய வேண்டும்

    ஆணாதிக்கம் ஒழிய வேண்டும்

    இந்த வீடியோவை மூடர் கூட்டம் பட இயக்குநர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்காகக் கூட நிற்க முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்

    மனிதர்கள் அனைவரும் சமம்

    மனிதர்கள் அனைவரும் சமம்

    இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும் என்று பதிவு செய்திருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    English summary
    Muslim woman threatened for criticizing varisu Movie, Director naveen tweet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X