Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
“லவ் டுடே“ 70 கோடி வசூல்..ஆனால்,பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை : லவ் டுடே திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி இதில் நடித்தும் இருந்தார்.
லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்த்து, டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து பட வெளியீட்டுக்காக காத்திருந்தனர்.
ஏய் எப்புர்ரா.. வெயிட்டை குறைத்து ஸ்மார்ட்டான விஜய்சேதுபதி.. இனிமே ஒன்லி ஹீரோ தான்!

லவ் டுடே
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். இவர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் பாலா தான் இவானா என பெயர் வைத்துள்ளார்.

கை மாறிய செல்போன்
லவ் டுடே படத்தின் ஹீரோவான பிரதீப் ரங்கநாதனும் இவானாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் இவானாவின் தந்தை சத்யராஜுக்கு தெரியவருகிறது. சத்யராஜ், இருவரின் போனையும் மாறி மாறி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். செல்போன் கை மாறிய பிறகு தான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

படத்திற்கு குவிந்த பாராட்டு
லவ் டுடே படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை நடிகர் வீட்டிற்கு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். அதேபோல நடிகர் சிம்புவும் பிரதீப்பு பூங்கொத்து கொடுத்து பாராட்டி உள்ளார். இப்படத்திற்கு நான்கு திசைகளில் இருந்தும் பாராட்டுக்க குவிந்தன.

மகத்தான வசூல்
நவம்பர் 4ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் பெரிதாக கலெக்சன் இல்லை. பின்பு ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்து உலக அளவில் லவ் டுடே திரைப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகத்தான வசூல்
நவம்பர் 4ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் பெரிதாக கலெக்சன் இல்லை. பின்பு ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்து உலக அளவில் லவ் டுடே திரைப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் சம்பளம்
2கே காதலை புட்டு புட்டு வைத்த லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்திற்கு சம்பளமாக ரூ. 70 லட்சம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலாக 80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது, இதனால் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்திற்காக 1.50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.