மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது.. சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார் ரஜினிகாந்த்.

கடந்த 19ஆம் தேதி...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

வைரலான போட்டோக்கள்
தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டது முதல் தோஹாக விமான நிலையம் சென்றது வரை ஏராளமான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

மருத்துவ பரிசோதனை
ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் ரஜினி. நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போட்டோக்கள் வெளியாகி ட்ரென்ட்டானது.

சென்னை திரும்பினார் ரஜினி
மேலும் அமெரிக்காவில் அவ்வப்போது தனது ரசிகர்களையும் சந்தித்து வந்தார் ரஜினிகாந்த், அந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி தெறிக்கவிட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பியுள்ளார்.

நல்லபடியாக முடிந்தது
இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்ததாக தெரிவித்தார்.

இந்த வாரம் தொடங்கும்
அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டப்பிங் பணிகள் இந்த வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











