twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை, இப்படி ஆசை காட்டி ஏமாற்றிவிட்டீர்களே விஷால்?

    By Siva
    |

    Recommended Video

    Ayogya Movie: அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து காட்டமாக ட்வீட்- வீடியோ

    சென்னை: அயோக்யா படத்தில் வரும் வேற லெவல் பாடல் வீடியோ இன்று வெளியிடப்படாதாம்.

    புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அயோக்யா படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

    Vera level song from Ayogya is not released today

    இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் அயோக்யா. இந்நிலையில் இந்த படத்தில் வரும் வேற லெவல் பாடல் வீடியோ இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.

    டாய்லெட் பேப்பரை இப்படியும் பயன்படுத்தலாமோ?: ப்ரியங்கா கணவரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் டாய்லெட் பேப்பரை இப்படியும் பயன்படுத்தலாமோ?: ப்ரியங்கா கணவரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

    அறிவித்தபடி பாடல் வீடியோ வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பாடல் வீடியோவை வெளியிட முடியவில்லையாம். அந்த வீடியோ எப்பொழுது வெளியிடப்படும் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.

    வீடியோ வெளியாகும் அதை மீண்டும் மீண்டும் பார்த்து புது சாதனை படைக்க வைக்க வேண்டும் என்று காத்திருந்த விஷால் ரசிகர்கள் தான் பாவம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    English summary
    Vera Level song from Vishal starrer Ayogya is not released today because of technical glitches.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X