Don't Miss!
- Sports
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலிலாம் எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
- Automobiles
ஸ்டைலுக்காக பைக்கில் இந்த விஷயத்தை மட்டும் பண்ணீராதீங்க! அப்புறம் கடவுளால கூட உங்களை காப்பாத்த முடியாது!
- News
பாகிஸ்தானில் சம்பளம் ‛கட்’.. கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடியால்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
- Finance
FII வெளியேற்றம், பட்ஜெட் 2023, பொருளாதார அச்சம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
தாமதமாகும் தளபதி 67 டைட்டில் ப்ரோமோ... ஏமாற்றத்தில் ரசிகர்கள்... இதுதான் காரணமா?
சென்னை: வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி 67ல் பிஸியாகிவிட்டார் விஜய்.
மாஸ்டருக்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள தளபதி 67 படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
வாரிசு படத்தை முடித்த கையோடு தளபதி 67 ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொண்டதால் விரைவில் படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி தளபதி 67 டைட்டில் ப்ரோமோ வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
ராஷ்மிகா
மந்தனா,
ராதிகா
உடன்
வாரிசு
சக்சஸ்
பார்ட்டி..
வெறித்தனம்
காட்டும்
தளபதி
67
லுக்கில்
விஜய்!

எதிர்பார்ப்பில் தளபதி 67
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் விஜய். அவர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களும் விஜய்யின் தளபதி 67 படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், தளபதி 67 ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 67 டைட்டில் ப்ரோமோ
இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் முதலில் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் தான் அதில் வில்லனாக நடித்து வரும் மிஷ்கின் பேசியிருந்தார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அது அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

இதுதான் காரணமா?
தளபதி 67 கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதை விடவும் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக தளபதி 67 இருக்க வேண்டும் என லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதனால் விக்ரம் படத்துக்கு வெளியிட்ட டைட்டில் ப்ரோமோவை போல, தளபதி 67க்கும் ஷூட் செய்து வருகிறார் லோகேஷ். இந்த ப்ரோமோ தான் ரசிகர்களுக்கான முதல் ட்ரீட்டாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், தளபதி 67 டைட்டில் ப்ரோமோ லேட்டாவதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

வாரிசு சக்சஸ் மீட்
வாரிசு வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள விஜய், தொடர்ந்து அந்தப் படத்தின் சக்சஸ் மீட், செலிப்ரேஷன் போன்றவைகளில் பிஸியாக இருக்கிறார். இதனால் டைட்டில் ப்ரோமோ ஷூட்டிங் இன்னும் முடியவில்லையாம். அதோடு வில்லன் நடிகர்களும் ஒரு சிலர் மட்டுமே இன்னும் படப்பிடிபில் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவும் டைட்டில் ப்ரோமோ தாமதமாவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தப் படத்தில் கமல், ஃபஹத் பாசில், சூர்யா ஆகியோரும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.