twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்தை மறந்தாரா விஜய்? ரஜினி, கமல் விசாரிக்கிறாங்க.. விஜய் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

    |

    சென்னை: விஜயகாந்தின் வெற்றி படத்தில் தான் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய்.

    இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். அடுத்ததாக 3வது போஸ்டரையும் விரைவில் வெளியிட உள்ளார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்துக்கு ட்வீட் போட்டு சீக்கிரம் குணமாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யும் வாழ்த்து சொல்வாரா? அல்லது மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திப்பாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    வாரிசு செகண்ட் லுக்கும் காப்பியா...ரஜினி படங்களை காப்பி அடிக்கிறாரா விஜய்? வாரிசு செகண்ட் லுக்கும் காப்பியா...ரஜினி படங்களை காப்பி அடிக்கிறாரா விஜய்?

    விஜயகாந்தும் விஜய்யும்

    விஜயகாந்தும் விஜய்யும்

    எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1984ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெற்றி. தனது மகனுக்கு எப்போதுமே வாழ்வில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் என பெயர் சூட்டிய எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தின் வெற்றி படத்திலும் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். வெற்றி படத்தைத் தொடர்ந்து குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, செந்தூரப்பாண்டி என தொடர்ந்து விஜயகாந்தின் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் விஜய்.

    ரொம்பவே நெருக்கம்

    ரொம்பவே நெருக்கம்

    விஜயகாந்த் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும், குடும்ப உறவினர்களை போலவுமே இருந்தனர். சிறு வயது முதலே விஜயகாந்தின் படங்களில் நடித்த விஜய்க்கு சினிமா மீது ஆர்வம் வர அவரும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாக வேண்டும் என விஜய் நினைத்த போது கூட தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சம்மதம் தெரிவிக்க வில்லை என்றும் விஜயகாந்த் தான் அவர் திறமையானவர் பையனை நடிக்க வைங்க என்று சொன்னதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    விஜய்க்காக சம்பளம் வாங்கல

    விஜய்க்காக சம்பளம் வாங்கல

    நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆனாலும், அவருக்கு முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால், எப்படியாவது மகன் விஜய்யை வெற்றி ஹீரோவாக மாற்ற வேண்டும் என நினைத்த எஸ்.ஏ. சந்திரசேகர் அடுத்ததாக செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க விஜயகாந்திடம் கோரிக்கை வைத்தார். உடனடியாக ஓகே சொன்ன விஜயகாந்த் அந்த படத்திற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் கொடுத்த அட்வான்ஸை கூட திருப்பிக் கொடுத்து நம்ம விஜய்க்காக பண்றேன், இதுல காசு கொடுத்து என்ன அசிங்கப்படுத்த பார்க்குறீங்க பார்த்தீங்களான்னு சொல்லிட்டு சும்மாவே நடித்துக் கொடுத்தாராம்.

    பெரிய கேப்

    பெரிய கேப்

    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய்க்காக மட்டுமே படம் பண்ண வேண்டும் என முடிவு செய்த நிலையில், விஜயகாந்த் உடன் இணைந்து பணியாற்றவில்லை. அதனால், ஒரு பெரிய கேப்பே இருவருக்கும் இடையே விழுந்து விட்டது. அதன் பின்னர், பல ஆண்டுகள் விஜயகாந்த் மற்றும் விஜய் குடும்பமும் சந்திக்கக் கூட முடியாத சூழல் உருவானது. சூர்யா, விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் விஜய் பாடினால் நல்லா இருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டதும் உடனடியாக ஓடிப் போய் சூர்யாவுக்காக 3 பாடல்களை அந்த படத்தில் பாடி கொடுத்தார் விஜய்.

    விஜயகாந்தை சந்திப்பாரா விஜய்

    விஜயகாந்தை சந்திப்பாரா விஜய்

    ஆனால், இன்றோ நடிகர் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தனது கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்தி வரும் நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நடிகர் விஜய், விஜயகாந்துக்கு வாழ்த்து சொல்வாரா? அல்லது நேரில் சென்று நலம் விசாரிப்பாரா என விஜயகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    English summary
    Vijayakanth fans expecting actor Vijay will meet him at hospital or send a speedy recovery wish post in his twitter handle. Vijay debuted as a child artist in Vijayakanth movie Vetri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X