Don't Miss!
- Sports
8 மாதங்களாக டி20 யில் சொதப்பும் இஷான் கிஷன்.. விமர்சனத்துக்கு லைக் செய்து மாட்டி கொண்ட இந்திய வீரர்
- News
13 மணி நேரம் டிரவல்.. கிளம்பிய ஊரிலேயே பயணிகளை இறக்கிவிட்ட விமானம்.. நொந்து போன பயணிகள்.. என்னாச்சு?
- Finance
இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
காசு, பணம், துட்டு, மணி என ஆட்டம் போடும் ஏடிகே... ப்ரோமோ கண்டென்ட் இல்லாம தவிக்கும் பிக் பாஸ்!
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சி
இன்றோடு
59வது
நாளை
எட்டியுள்ளது.
21
போட்டியாளர்களுடன்
தொடங்கிய
இந்த
சீசனில்
தற்போது
13
ஹவுஸ்மேட்ஸ்
போட்டியை
தொடர்ந்து
வருகின்றனர்.
இந்நிலையில்,
59வது
நாளுக்கான
3வது
ப்ரோமோ
தற்போது
வெளியாகி
நெட்டிசன்களால்
ட்ரோல்
செய்யப்பட்டு
வருகிறது.
பிக்
பாஸில்
மாஸாக
பெர்ஃபார்மன்ஸ்
கொடுத்த
மணிகண்டன்..
வயிற்றெரிச்சலில்
தனம்!

இந்த வாரம் டபுள் தமாக்கா
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இன்று 59வது நாளை எட்டியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் குயின்ஷியும் எவிக்ஷன் செய்யப்பட்டார். தற்போது 13 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வரும் வாரம் இரண்டு எவிக்சன் நடைபெறும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தனித்தனியாக ஆடும் போட்டியாளர்கள்
அதன்படி, இந்த வாரம் ஆயிஷா, ராம், ஏடிகே ஆகியோர் எவிக்சன் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளனர். இந்த வாரம் தலைவர் மணிகண்டன், விக்ரமன், ஷிவின், ரச்சிதா, அமுதவாணன், ஜ்னனி, தனலட்சுமி ஆகியோர் Safe Zone-இல் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் குரூப் டாஸ்க் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் தனித்தனியாக விளையாடும் படி பிக் பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு பாத்திரத்தில் விளையாடி வருகின்றனர்.

59வது நாள் ப்ரோமோ
அதாவது போட்டியாளர்கள் இந்த வாரம் முழுவதும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தோஷப்படுத்தி அவர்களிடம் இருந்து பணம் அன்பளிப்பாக பெற வேண்டும். இந்நிலையில், இன்றை தினத்தின் முதல் ப்ரோமோவில் ஆயிஷாவுக்கும் விக்ரமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏடிகேவும் விக்ரமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இனிமேல் உன்னிடம் பேசமாட்டேன் என விக்ரமனிடம் கோபமாக பேசுகிறார் ஏடிகே. அதன்பின்னர் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மணிகண்டன் வெறித்தனமான டான்ஸ் ஃபெர்பாமன்ஸ் செய்து அசீமிடம் இருந்து 15000 அன்பளிப்பு பெறுகிறார். இதனைப் பார்த்து பொறாமைப்படும் தனலட்சுமி, இது திறமைக்கு கிடைத்தது இல்லை, குரூப்பிசம் என ஜனனி, ரச்சிதாவிடம் புலம்புகிறார்.

ஏடிகேவின் ஆட்டம்
இந்நிலையில், தற்போது வெளியான 3வது ப்ரோமோ எந்தவித காரசாரமான விவாதமும் இல்லாமல் ஏடிகேவின் ஆட்டத்துடன் வெளியாகியுள்ளது. போகானந்தா பாத்திரத்தில் விளையாடும் ஏடிகே, "காசு, துட்டு, பணம், மணி' என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ஃபெர்பாமன்ஸ் செய்வதாக 3வது ப்ரோமோ முடிகிறது. கடந்த வாரங்களில் வெளியாகும் ப்ரோமோக்கள் ஒவ்வொன்றும் எதாவது சண்டை, காரசாரமான விவாதம் என வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த வாரம் அப்படி விறுவிறுப்பு இல்லாமல் டம்மியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ப்ரோமோவே இப்படி இருந்தா?
ஏற்கனவே இந்த சீசன் தான் ரொம்பவே ஃபோரிங்காக உள்ளதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல், சென்ற வாரமும் ப்ரோமோ டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் ப்ரோமோவே இப்படி இருந்தால், எபிசோட் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இப்படி மொக்கையான டாஸ்க்கை கொடுத்து அதில் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ஷன் செய்யப்படுவது எல்லாம் சரிதானா என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.