ஜெயம் ரவியை இயக்க போகும் மாஸ் ஹீரோ...வெளியான அசத்தல் தகவல்

சென்னை : மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டு பாகங்களிலும் தனது போஷனை நடித்து முடித்து விட்டதாக சமீபத்தில் சோஷியல் மீடியாவில் அறிவித்தார் ஜெயம் ரவி. இதில் மெயின் ஹீரோவான பொன்னியின் செல்வன் கேரக்டரில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததால் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த பிறகு, அடுத்த படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டுள்ளாராம் ஜெயம் ரவி. அடுத்து ஜெயம் ரவி நடிக்க போதும் படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

ரவியை சந்தித்த ப்ருத்விராஜ்

ரவியை சந்தித்த ப்ருத்விராஜ்

தற்போது அடுத்த படத்தை முடிவு செய்யும் வேலையில் தான் ரவி பிஸியாக இருந்து வருகிறாராம். இதற்கிடையில் சமீபத்தில் மலையாள டாப் ஹீரோ ப்ருத்விராஜும், ஜெயம் ரவியும் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.

ஆர்த்தி பகிர்ந்த ஃபோட்டோ

ஆர்த்தி பகிர்ந்த ஃபோட்டோ

இந்த ஃபோட்டோவை ரவியின் மனைவி ஆர்த்தி சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். ப்ருத்விராஜ் சமீபத்தில் சென்னை வந்த போது ஜெயம் ரவியை சந்தித்தாராம். இந்த சந்திப்பின் போது தான் இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டதாம்.

ஒரே படத்திலா

ஒரே படத்திலா

இந்த ஃபோட்டோவுடன் ஆர்த்தி பதிவிட்டுள்ள கேப்ஷனில், இரண்டு திறமையான நடிகர்களும் ஒரே படத்தில் என குறிப்பிட்டுள்ளார். இருவருடன் சேர்ந்து ஆர்த்தியும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். ஃபோட்டோ மட்டுமல்ல தங்கள் வீட்டு நாய்க்குட்டி ஆர்சருடன் ப்ருத்விராஜ் கொஞ்சி விளையாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

மகனுக்கு சர்ப்ரைஸ்

மகனுக்கு சர்ப்ரைஸ்

ரவியும், ஆர்த்தியும் தங்கள் மகன் ஆரவிற்கு சர்ப்ரைஸ் தருவதற்காக இந்த நாய்க்குட்டியை வாங்கி கொடுத்தார்களாம். இந்த நாய்க்குட்டி ஆரவ்விற்கு மட்டுமல்ல ரவி மற்றும் ஆர்த்திக்கும் ரொம்ப செல்லமாம்.

கனிகாவும் சொன்னார்

கனிகாவும் சொன்னார்

ப்ருத்விராஜ் மற்றும் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் நடிகை கனிகாவும் பகிர்ந்துள்ளார். இது மிகவும் ஸ்பெஷலான ஃபோட்டோ எனவும், இரு பெரும் நடிகர்கள் தூணை போல் நிற்கிறார்கள் எனவும் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ப்ரோ டாடி

ப்ரோ டாடி

கனிகா தற்போது ப்ருத்விராஜ் இரண்டாவதாக இயக்கும் Bro Daddy என்ற படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால், மீனா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. முழு நீள காமெடி படமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

டைரக்டரான ப்ருத்விராஜ்

டைரக்டரான ப்ருத்விராஜ்

ப்ருத்விராஜ் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதுடன், டைரக்ஷனிலும் இறங்கி உள்ளார். மோகன்லாலை வைத்து முதன் முதலில் 2019 ல் இயக்கிய லூசிஃபர் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து Bro Daddy படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஏறத்தாழ முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

ரவியை இயக்க போகிறாரா

ரவியை இயக்க போகிறாரா

இந்த படத்தை முடித்த பிறகு மூன்றாவதாக ஜெயம் ரவியை வைத்து ஆக்ஷன் படம் ஒன்றை இயக்க ப்ருத்விராஜ் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக தான் இந்த திடீர் சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X