For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யாருக்கும் அடங்காத ஆராத்தி. யூட்யூபில் வைரலாக விடியோஸ் மூலம் புகழ் பெற்ற பூர்ணிமா ரவி ஸ்பெஷல் பேட்டி

  |

  சென்னை : தமிழ் சினிமா வித்யாசமான பல பயணங்கள பார்த்துருக்கு. வெளி மாநிலத்துல இருந்து இங்க நடிக்க வந்த ஹீரோ ஹீரோயின், சீரியல்ல இருந்து சினிமாவுக்கு வந்தவங்க.. சினிமாவுலருந்து சீரியலுக்கு போனவங்க, வேற மொழில நடிச்சவங்க தமிழ் சினிமாவுக்கு வர்றது இதையெல்லாம் தாண்டி, இப்போ வேற ஒரு ட்ரண்ட்-ல போயிட்டு இருக்கு.

  மாசம் 20 ஆயிரம் கெடச்சா போதும்னு நடிக்க வந்தேன் | Araathi Poornima Ravi Exclusive | Filmibeat Tamil

  அதாவது சோசியல் மீடியாவுல இருக்க திறமையாளர்களை சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கும் கொண்டு வர்றது.அப்படியான ஒரு வெற்றி நாயகிதான் பிரபல யூட்யூபர், " அராத்தி பூர்ணிமா ரவி" அராத்தி-னு சொன்னா அடங்காதவள் மற்றும் ஆல்ரவுண்டர்னு எல்லாருக்குமே தெரியும்.

  ஹாஷ்டேக் ட்ரண்ட்ல அனல் பறக்க முன்ன வந்த இவங்க, படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம ஃபிலிம்பீட் சேனலுக்காக நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணிகிட்டாங்க..

  Aarathi that does not belong to anyone Says you tube fame Poornima Ravi

  இதுதான் ரகசியம்

  கேள்வி : இவ்ளோ ரசிகர்களை சம்பாதிக்க பக்க பலமா இருந்தது என்ன?

  பதில் : என்னோட ஒரிஜினாலிட்டி.. கேஷ்வலா இருக்கறதால, நடிக்கிறதால, எதிர் வீட்டு பொண்ணு பக்கத்து வீட்டு பொண்ணு கலகலன்னு இருக்க மாதிரி, கேஷ்வலா மக்கள் ஃபீல் பண்றாங்க அதனால எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நானேதான் ஆராதின்னு பெயர் வச்சிகிட்டேன். வழக்கமா இப்ப உள்ள பொண்ணுங்கல்லாம் அராத்தா சுத்திகிட்டு இருப்பாங்க. நானே அப்படித்தான். அது என்னோட ஒரிஜினாலிட்டி. அதே போல மத்தவங்களும் இருக்கறதால, ஏ.. இவ நம்மள மாதிரியே இருக்கால்ல.. இது போலதான நாமளும் இருக்கோம்ன்னு ஒரு ஃபீல் எல்லாருக்கும் வரும்.

  20 ஆயிரம் போதும்

  கேள்வி : ஐடி கம்பனிலதான் முதல்ல வேல பார்த்தீங்களாமே...

  பதில் : ஆமா.. எனக்கு அப்போ தேவையானது எல்லாமே அப்போதைக்கு இருபதாயிரம் ரூபாய்தான். என்னோட சாப்பாடு, வாடகை போக மீதி உள்ளது, எஜிகேஷனல் லோன், மேக்கப் திங்க்ஸ், பர்ஃப்யூம், ட்ரஸ் இதுக்கெல்லாம் போதுமானதா இருந்துச்சு. அல்ரெடி இருந்த கம்பனில வேலை இல்ல. அங்க 25K வாங்கினேன். அதனால அட்லீஸ்ட் இருபதாயிரமாச்சும் வேணும்ன்னு தான் நெனச்சேன்.வேற வழியே இல்லாம யூட்யூப் ல எதாச்சும் முடியுமான்னு தான் வந்தேன். எனக்கு பிடிச்சத நான் பன்றேன்னு தான் இத நான் செலக்ட் பண்ணேன்.

  Aarathi that does not belong to anyone Says you tube fame Poornima Ravi

  அப்போதைக்கு ஐடியா

  கேள்வி : அல்ரெடி உங்களுக்கு இப்படி வீடியோஸ் பன்றதுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?

  பதில் : ஐடில ஒர்க் பண்ணப்பவே ஒரு யூட்யூப் சேனல் ல ஒர்க் பண்ணேன். என்னாலயே ஸ்க்ரிப்ட், டயலாக், கான்சப்ட் ல்லாம் பண்ண முடியும்ன்னு சொல்லி, அத செஞ்சும் காட்டினேன். சினிமால வரனும், சாதிக்கனும் பெரிய ஆளா ஆகனும்ன்னுல்லாம் அப்போதைக்கு ஐடியா இல்ல. எனக்கு நடிக்க பிடிக்கும், அதனால யூட்யூப் சேனல்ஸ் ல நடிச்சேன். பிடிச்சத பன்றதுல இருக்க சந்தோஷமே தனி.நிறைய பேர் விதவிதமா சொல்லுவாங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஒரு வீடியோவே போடுறேன். நூறு வீடியோவுக்கு மேல போட்டுருக்கேன். மேக்சிமம் பாசிடிவ் கமெண்ட்தான் வந்துருக்கு. அதுலயும் சிலர் " இவங்கள சினிமா மிஸ் பண்ணுது" இப்படி சிலர் சொன்னது கொஞ்சம் சினிமா பக்கம் என்ன திரும்ப வச்சது.

  "ப்ளான் பண்ணி பண்ணனும்" அனுபவம் பற்றி..

  முதல் நாள் ஷூட், முதல் ஷாட். கிட்டத்தட்ட ஒன்ற நிமிஷத்துக்கு மேல உள்ள டயலாக். எனக்கு கேரவன் இருக்கு, மேக்கப் போட்டு ரெடியாகனும்ன்னு ல்லாம் தெரியல. சாதாரணமா சேனல் ல பன்றப்போ வீட்ல இருக்க மாதிரி, இங்கயும் ஒரு ரூம்ல கெளம்பி ரெஃப்ரஷ் ஆகிட்டு, ப்ரொடக்‌ஷன்ல குடுத்த சாப்பாட சாப்பிட்டு ரெடியா இருந்தேன். டக்குன்னு கூப்பிட்டாங்கன்னு அந்த வியர்வையோட அப்படியே போயி கேமரா முன்ன நின்னேன். இப்படி இருக்கனும், இப்படி நடிக்கனும், மேக்கப், ஸ்வெட், கேரவன் இத பத்தில்லாம் யாரும் சொல்லவே இல்ல.. எனக்கும் தெரியல.

  Aarathi that does not belong to anyone Says you tube fame Poornima Ravi

  வேற லெவல்

  எப்படியும் ரொம்ப நேரம் ஆகிடும், நிறைய டேக் வாங்கும் இந்த பொண்ணுன்னுதான் நெனச்சாங்க. அதே வியர்வையோட, மேக்கப் இல்லாம கேமரா முன்ன நின்னேன். முதல் நாள் முதல் டேக். ரெண்டு மூனு டேக்லயே அந்த டயலாக்க சொல்லி முடிச்சேன். அவ்ள்ளோ சூப்பரா வந்துருச்சு. மொத்த டீமும் கை தட்டுனாங்க. டைரக்டர்ல்லாம் அவ்ளோ பாராட்டினார். ரம்யா மேடம் கேரவன் ல இருந்தாங்க.. அவங்க கிட்ட, ஹீரோ சார் கிட்டன்னு நான் பண்ணத போட்டு காட்டி, " பாருங்க இந்த பொன்னு எவ்ளோ நல்லா பண்ணிருக்கு"ன்னு சொல்லி அவ்ளோ சந்தோஷப்பட்டாங்க. ஃபங்ஷன்ல கூட MS பாஸ்கர் சார் என் பேர சொல்லி பாராட்டினதெல்லாம் வேற லெவல். எதிர்பாக்கவே இல்ல.. இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும்

  காம்பினேஷனே கிடையாது. ஆனா ஒரு புதுமுக நடிகைக்கு, திறமைய பாராட்டி அங்கீகாரம் கிடைக்கும் போது அதுதான் ஒரு வெற்றியா நிறைவா இருக்கு. என்ன ஒரு புதுமுக நடிகையா அலட்சியமா பார்க்காம, என் திறமைக்கு மதிப்பு குடுத்து என்னை நடத்திய விதம் எனக்கு இந்த "ப்ளான் பண்ணி பண்ணனும்" டீம் ல கிடைச்சது. அவங்கள் ல ஒருத்தரா, ஒரு செலிப்ரட்டியா கொண்டாடினது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.

  Aarathi that does not belong to anyone Says you tube fame Poornima Ravi

  கல்யாணம் ஆகிடுச்சுன்னு

  கேள்வி: பூர்ணிமாக்கு எந்த மாதிரி கேரக்டர் நடிக்கனும்-ன்னு ஆசை?

  பதில் : எதார்த்தமான ஒரு பொண்ணு கேரக்டரா நடிக்கனும்.. நூறு பேர் இருந்தாலும், நான் நடிக்கிறப்ப அந்த கேரக்டரோட ஒரிஜினாலிட்டி என்னவோ அது போல கேஷ்வலா நடிச்சி, அடிச்சி தூக்கனும். அத்தன பேரும் கை தட்டனும். அவ்ளோதாங்க. கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஒரு வதந்தி இருக்கு ...ஆனா அப்படில்லாம் இல்லங்க. இன்னமும் சிங்கிள் தான்.இப்போ ஒரு குழந்தைகிட்ட போயி, " ஏ.. உன் கிட்ட இருக்க சாக்லெட் ட எடு"ன்னு சொன்னா அது ஃபீல் பண்ணும். ஏன்னா அதுகிட்ட சாக்லெட் இல்ல. அது மாதிரி கல்யாணம் ஆகாத பொண்ண பாத்து , கல்யாணம் ஆன பொண்ணுன்னு சொன்னா பீல் ஆகுமா இல்லயா? இன்னும் ஆகல ப்ரோ.. வெய்ட்டிங். நானே சிங்கிளா இருக்கேன்.. இந்த மாதிரி வதந்திய கெளப்பி விட்டா அப்பறாம் எப்படி.. என்று சிரித்தார் ஆராத்தி பூர்ணிமா

  கனவு எல்லாமே சினிமாதான்

  கேள்வி: அராத்திக்கு என்ன மாதிரி பையன் வேணும்

  பதில்: பெரிய எதிர் பார்ப்புல்லாம் இல்லங்க.. என்ன மதிச்சா. போதும், புரிஞ்சிகிட்டா போதும். மீன்கள் விற்கபடும், விற்கப்படும், -ங்கிற மாதிரி மணமகன் இருந்தா ஓக்கே தான். ஆனா அது நடக்கறப்ப நடக்கட்டும். இப்போ என்னோட குறிக்கோள், கனவு எல்லாமே சினிமாதான். அதுல நல்லா வரனும். என் திறமைக்கான அங்கீகாரம், தளம் கிடைக்கனும்.என்று கலகலப்பாக நம்மிடையே பகிர்ந்தார் அராத்தி பூர்ணிமா. ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தை தொடர்ந்து மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ப்லிம்பீட்.அராத்தி பெண்ணின், சாந்தமான கேஷ்வலான அட்ராசிட்டியை,முழு வீடியோவைக் காண பில்மிபீட் யுட்யூபை கிளிக் செய்யவும் .

  பிக்பாஸ் சீசன் 5 எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தெறிக்கவிடும் கமல்! பிக்பாஸ் சீசன் 5 எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தெறிக்கவிடும் கமல்!

  English summary
  Poornima Ravi Comments on Youtube Araathi : பிரபல யூட்யூபர், “ அராத்தி பூர்ணிமா ரவி” அராத்தி-னு சொன்னா அடங்காதவள் மற்றும் ஆல்ரவுண்டர்னு எல்லாருக்குமே தெரியும், என்று தெரிவித்துள்ளார்.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X