X
வீரா

வீரா

Action | 16 Feb 2018 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

வீரா கதை

வீரா தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை ராஜாராமன் இயக்க, கிருஷ்ணா, ராஜேந்திரன், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கதை : வட சென்னைப் பகுதிகளில் காலங்காலமாக நிலவும் ஆதிக்கப்போட்டியும், அதனால் எளிய மனிதர்களுக்கு விளையும் தீமைகளையும், அதிகார வர்க்கத்தினரின் கைதேர்ந்த அரசியலையும் பற்றிப் பேசும் படமாக வந்திருக்கிறது 'வீரா'. மாவட்டத் தலைவருக்கு நெருக்கமானவராக இருக்கும் கண்ணா ரவி குறிப்பிட்ட ஏரியாவில் மன்றத் தலைவராக இருக்கிறார். அவருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து, தாங்கள் ஏன் அந்த இடத்திற்கு வரக்கூடாது என நெருங்கிய நண்பர்களான கிருஷ்ணாவும், கருணாகரணும் நினைக்கிறார்கள். இதற்கிடையே அந்த ஏரியாவில் டானாக இருக்கும் ஆடுகளம் நரேனுடனான முன்பகையால் ஒருவர் அவரது பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்வேன் எனச் சவால் விடுகிறார். அந்த ரௌடியிடம் இருந்து தனது பெண்ணைக் காப்பாற்ற பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் ஆடுகளம் நரேன். அந்தப் பெண்ணை கிருஷ்ணாவும் காதலிக்கிறார். நாயகன் கிருஷ்ணா, நாயகியின் அப்பாவான நரேன் மற்றும் நாயகியை திருமணம் செய்துகொள்ளத் துடிக்கும் இன்னொரு ரௌடி இருவரையும் சமாளித்து, தான் காதலிக்கும் பெண்ணை அடைந்தாரா, மன்றத் தலைவராகி அதிகாரத்தைக் கைப்பற்றினாரா என்பதுதான் கதை.
Read More

வீரா நடிகர்கள் & படக்குழுவினர்

வீரா அணியின் தகவல்

இயக்குனர் ராஜாராமன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் எல்ரட் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வீரா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ராவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருந்தாலும், அழுத்தமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை உள்ளிட்ட எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸும் வொர்க் ஆகாததால் பிரேக் டவுன் ஆகி நடுவிலேயே நிற்கிறது 'வீரா' வண்டி. ஹீரோயின் ஐஷ்வர்யா கிருஷ்ணாவை காதலிப்பதான காட்சிகளிலும் எந்தக் கனமும் இல்லை. நார்த் மெட்ராஸ் கதைக்களம் என்பதற்காகவே படத்தில் வருகிற எல்லோரும் வசனத்திற்கு வசனம் பீப் போடாமல் 'ங்கோ**' என்கிறார்கள். வடசென்னையின் வாழ்வியலைக் காட்சிப்படுத்த இதை விட வேறு வழியே கிடைக்கவில்லையா என்ன? பேசாமல், படத்தில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட அந்த வார்த்தையையே, டைட்டிலாக வைத்திருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

வீரா செய்திகள்

வீரா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வீரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+