For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேர்கொண்ட பார்வை... தல அஜீத்தை பாராட்டிய சூர்யா

|
Nerkonda Paarvai Public Opinion | Nerkonda Paarvai | Ajith Kumar | Shraddha Srinath | H Vinoth

சென்னை: நடிகர் அஜீத் குமார் நடிப்பில் நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த நடிகர் சூர்யா படத்தையும் அஜீத்தையும் பாராட்டி கடிதம் எழுதியதோடு பொக்கே அளித்து வாழ்த்தியுள்ளார்.

நடிகர் அஜித்குமார் தீனா படத்திற்கு பிறகு தான் தல என்று ரசிகர்களால் மரியாதையோடு அழைக்கப்பட்டாலும் அவர் அந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் போராடியுள்ளார். என்னிக்குமே மக்கள் மனசுல அவர் ஒரு மாஸ் ஹீரோ தான். அவரோட இடத்தை யாருமே நிரப்ப முடியாது. அவர் ஹீரோவா அறிமுகமான அமராவதி படத்தை தொடந்து இன்னிக்கு வரைக்கும் பலவிதமான சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது 2016ஆம் ஆண்டில் இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்.

National Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..!

மகளிருக்கு மரியாதை

மகளிருக்கு மரியாதை

பெண்களின் சுயமரியாதையையும் உரிமையையும் வெளிக்காட்டும் திரைப்படம். பெண்களை இழிவுபடுத்தும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்களின் மரியாதையை வலியுறுத்தும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.

இதில் அஜித் வழக்கறிஞராக தன் நடிப்பால் அசத்தியுள்ளார்.

அஜீத்திற்கு பாராட்டு

அஜீத்திற்கு பாராட்டு

இந்த படம் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வெளிவந்ததாக தகவல்கள் இல்லை. அஜித்தின் நடிப்பு மற்றும் எச்.வினோத்தின் இயக்கத்தை படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி நடுநிலை ரசிகர்களும் கோலிவுட் திரையுலக பிரபலங்களும் முதல் நாளே இந்த படத்தை பார்த்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா வாழ்த்து

நடிகர் சூர்யா வாழ்த்து

வார நாட்களிலேயே வெளியிடப்பட்டாலும் கூட முதல் நாளிலேயே சக்கைபோடு போட்டு வருகிறது இந்த படம். இப்படத்தை பார்த்த பலர் சமூக ஊடகங்களின் வாயிலாக பாராட்டி வருகின்றனர். அதில் முக்கியமாக அஜித்தின் குடும்ப நண்பர் மற்றும் நலம் விரும்பியான நடிகர் சூர்யா இப்படத்தில் அஜித்தின் நடிப்பையும் , எச்.வினோத்தின் இயக்கத்தையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பியிருக்கிறார். அதோடு நேர்கொண்ட பார்வை வெற்றியடைய வாழ்த்தினை தன் கைப்பட கடிதமாக எழுதி அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத் சூர்யா நட்பு

அஜீத் சூர்யா நட்பு

பொதுவாகவே நடிகர் சூர்யா தனது பாராட்டு மற்றும் வாழ்த்தினை திரையுலகில் அனைவருடனும் பகிர்வது வழக்கம். அஜித், சூர்யா நட்பு என்பது நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மேலும் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது அஜித் என்றும் சில காரணங்களால் அவரால் தொடர முடியாததால் சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

நடிகர் சூர்யா திரைப்பட துறைக்கு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.

குடும்ப நட்பு

குடும்ப நட்பு

சூர்யா மட்டுமின்றி அவரது மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகாவும் தல அஜித்தின் குடும்ப நண்பர். அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் ஜோதிகா ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது பெரும் பாராட்டை பெற்றது. அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வெளியிட்ட பொழுதே ஜோதிகா இந்த படத்தில் அஜித் ஒப்பந்தம் ஆனதற்கு தனது வாழ்த்தினை ஒரு நாளிதழ் மூலம் தெரிவித்திருந்தார். அஜித் மற்றும் சூர்யா இடையிலேயான நட்பு குடும்ப நட்பாக மலர்ந்தது தொடர்கிறது.

English summary
Actor Surya wrote a wishes letter to Actor Ajith Kumar for who has been acted in Nerkonda Paarvai Movie released worldwide on yesterday, and it is running successfully.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more