கட்டம் கட்டிய கமல்... இந்த வாரமும் அசீம் எஸ்கேப் தான்... இதுதானா சார் உங்க டக்?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11வது வாரத்தின் இறுதிப் பகுதியை எட்டிவிட்டது.
76 நாட்களை கடந்துவிட்ட பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் யார் எவிக்சன் என்ற கேள்வி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம்போல இந்த வார டாஸ்க்கில் கட்டப்பஞ்சாயத்து என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கினார் அசீம்.

இதனால், அவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 பிக் பாஸ் 77வது நாள்

பிக் பாஸ் 77வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 76 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார் கமல்ஹாசன். அப்போது ரேங்கிங் டாஸ்க்கில் அசீம் நடந்துகொண்ட விதம் குறித்து பஞ்சாயத்து நடத்தினார். விக்ரமனை டார்க்கெட் செய்த அசீம், அவரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என பேசியிருந்தார். அதுபற்றி அசீமிடம் விளக்கம் சொல்லுங்க எனக் கேட்டார் கமல்.

 திருந்தவே திருந்தாத அசீம்

திருந்தவே திருந்தாத அசீம்

அப்போது சக போட்டியாளர்களிடமும் அசீம் குறித்து கேள்வி எழுப்பினார் கமல். அதில் பலரும் அசீமின் செயலை கடுமையாக கண்டித்தனர். ஆனாலும், அசீம் வழக்கம் போல சிந்து பாடி கமலுக்கே அல்வா கொடுத்தார். இனிமேல் நான் திருந்திடுவேன் சார், என்னோட அறிவு கண்ண திறந்துட்டீங்க என, கமலுக்கே சாம்பிராணி போட்டு வசியம் செய்தார். இதனால் அசீம் இன்னும் திருந்தவில்லை எனத் தெரிகிறது. முதல் வாரத்தில் இருந்தே பாடிய பாட்டையே திரும்ப திரும்ப பாடி வரும் அசீம், இனிமேலும் திருந்த வாய்ப்பே இல்லை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 எவிக்சன் கார்டுடன் வந்த கமல்

எவிக்சன் கார்டுடன் வந்த கமல்

இந்நிலையில், இன்று 77வது தினத்துக்கான முதல் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் எவிக்சன் கார்டுடன் என்ட்ரி கொடுக்கும் கமல், வழக்கம் போல ஹவுஸ் மேட்ஸ்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார். தனலட்சுமி, அசீம், மைனா நந்தினி மூவரும் தான் இந்த வாரம் எவிக்சன் பிராசஸின் இறுதிப் பட்டியலில் உள்ளனர். விக்ரமன், ஷிவின் இருவரும் மைனா நந்தினியை சொல்ல, கதிர் தனலட்சுமியை கூறுகிறார். மற்றவர்கள் அசீமை நோக்கி கைக்காட்டுகின்றனர்.

 நம்பவே முடியாத ரிசல்ட்

நம்பவே முடியாத ரிசல்ட்

அதில் அமுதவாணன் அசீம் தான் திரும்ப திரும்ப அழுத்தமாக சொல்லவும், "கேக்குது... கேக்குது... நல்லா கேக்குது.. ஆனா அது எனக்கு நல்லா தெரிஞ்சாலும் இவங்கள எப்பவும் உறுதியா நம்ப முடியாது" என பார்வையாளர்களை நோக்கி கை காட்டுகிறார். இதனால் இந்த வாரமும் அசீம் கிரேட் எஸ்கேப் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது. ஏற்கனவே தனலட்சுமி தான் இந்த வாரம் எவிக்சன் என்ற தகவல் வெளியாகி வைரலாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் அசீம் இறுதிப் பட்டியல் வரை வந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவது, விஜய் டிவி தனது டிஆர்பியை ஏற்றுவதற்காகவா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இறுதிவரை அசீமை வைத்தே பிக் பாஸ் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ண விஜய் டிவி முடிவு செய்துவிட்டதா எனவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X