நான் கர்ப்பமாக இருக்கும் போதே கண்டபடி கேலி பேசினாங்க.. குழந்தைகள் பிறந்ததும் சின்மயி உருக்கம்!
சென்னை: பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
வாடகைத்தாய் மூலமாகத்தானே குழந்தை பெத்துக்கிட்டீங்க என சில ட்ரோல்கள் டைரக்ட் மெசேஜ்களாகவே சின்மயியை நோக்கி தொந்தரவு செய்ய அதற்கான விளக்கத்தையும் கொடுத்து பலரது வாயை அடைத்திருக்கிறார் சின்மயி.
மேலும், அவர் கர்ப்பமாக இருக்கும் போதே, திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகின்றதே எப்போதான் குழந்தை பெத்துப்ப என்றும், குழந்தை பெற்றுக் கொள்ளும் யோகமே உனக்கு இல்லை என்றும் ஏளனமாக சிலர் ட்ரோல் செய்தது குறித்தும் தற்போது உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சின்மயிக்கு ட்வின்ஸ்
பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவிந்திரனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 8 ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாக சின்மயி தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார் சின்மயி.

வாடகைத்தாய் விமர்சனம்
பாடகி சின்மயி கடந்த 10 மாதங்களாக தான் கர்ப்பமாக இருப்பதாக எந்தவொரு அறிவிப்பையும், போட்டோவையும் வெளியிடாத நிலையில், வாடகைத்தாய் மூலமாக கடைசியாக குழந்தை பெற்றுக் கொண்டீர்களா என சில நெட்டிசன்கள் அவருக்கு டைரக்ட்டாகவே சோஷியல் மீடியாவில் மெசேஜ் செய்து மனதை கஷ்டப்படுத்தி உள்ளனர். இந்த இரு குழந்தைகளும் பத்து மாதம் தான் சுமந்து பெற்ற குழந்தைகள் என்றும், எனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும் நான் கருவுற்று இருந்தது என்றும் என் பிரைவசிக்காக தான் போட்டோக்களை வெளியிடவில்லை என்றும் விளக்கி இருந்தார்.

த்ரிஷா வாழ்த்து
நடிகர் பிரசன்னா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் "Wohooooo congratulations super happy for you two" என ட்வீட் போட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு பல படங்களில் சின்மயி தான் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருக்கும்போதே
பாடகி சின்மயி தனது சமூக வலைதள போஸ்ட்டில் கர்ப்பமாக தான் இருக்கும் போதே, சில நெட்டிசன்கள் திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகின்றதே உங்களுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என வில்லங்கமாக ட்ரோல்களை செய்து மனசை ரொம்பவே கஷ்டப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மூச்சு பிரச்சனை
கடந்த வாரம் ட்விட்டர் ஸ்பேஸில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சின்மயி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதே பேசினாரா? என சில நண்பர்கள் ஆச்சர்யத்துடன் எழுப்பிய கேள்விக்கு, ஆமாம், அதனால் தான் கடைசியில் மூச்சு பிரச்சனை கொஞ்சம் வந்து விட்டது என்றும் சின்மயி பதில் அளித்துள்ளார். சின்மயின் போஸ்ட்டுக்கு கீழ் ட்ரோல் செய்பவர்களை பற்றி கவலைப்படாதீங்க உங்க இரு குழந்தைகளிடம் நேரத்தை செலவழியுங்கள் அவர்கள் தான் உங்கள் வாழ்க்கை என ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











