அப்படியெல்லாம் போக முடியாது...ஒரே ட்வீட்டில் மொத்த அப்டேட்டும் கொடுத்த கார்த்தி

சென்னை : மணிரத்னம் இயக்கும் மிக பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் ஷுட்டிங் தாய்லாந்து வனப்பகுதிகளிலேயே ஆரம்பத்தில் நடத்தப்பட்டு வந்தது.

பிறகு கொரோனா பரவல் காரணமாக படத்தின் வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கொரோனா நோய் பரவலால் வெளிநாட்டில் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், பிறகு இந்தியாவிலேயே படத்தை எடுத்து முடிக்க மணிரத்னம் திட்டமிட்டார். அதன்படி ஐதராபாத், புதுச்சேரி என பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் படம் தயாராகி வருகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசம் சென்ற படக்குழு, அங்கு பிரம்மாண்ட அரண்மனையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இதற்கிடையில் படத்தில் ஐஸ்வர்யா ராயின் கேரக்டர் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் அவரின் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

 மணிரத்னம் அப்செட்

மணிரத்னம் அப்செட்

ஐஸ்வர்யாவின் ஃபோட்டோ லீக் ஆனதால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, இனி ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளது. படம் பற்றிய பல தகவல்கள் கசிந்து வருவதால் மணிரத்னம் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம்.

 என்ன செய்ய போகிறார்

என்ன செய்ய போகிறார்

சமீபத்தில் படத்தில் எந்தெந்த நடிகர்கள், எந்தெந்த ரோல்களில் நடிக்கிறார்கள் என்ற முழு பட்டியல் வெளியானது. இதற்கே மணிரத்னம் டென்ஷனாகி விட்டாராம். பிறகு கேரக்டர்களின் பட்டியல் தானே என சாதாரணமாக விட்டு விட்டாராம். ஆனால் தற்போது அடுத்தடுத்து பல ஃபோட்டோக்கள் வெளியாவதால் அவர் என்ன செய்யலாம் என யோசித்து வருகிறாராம்.

த்ரிஷாவும் ஃபோட்டோவை பகிர்ந்தார்

த்ரிஷாவும் ஃபோட்டோவை பகிர்ந்தார்

இதற்கு முன் ஜெயம் ரவி ஷுட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற ஃபோட்டோவும் வெளியானது. த்ரிஷா வேறு, படப்பிடிப்பு நடத்தப்பட உள்ள மத்திய பிரதேச அரண்மனை ஃபோட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து விட்டார். அதையும் ரசிகர்கள் வைரலாக்கி விட்டனர்.

 என் போர்ஷன் முடிந்தது

என் போர்ஷன் முடிந்தது

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் தனது போர்ஷனை முடித்து விட்டதாகவும், பொன்னியின் செல்வன் செட்டில் இருந்து மிகுந்த கனத்த இதயத்துடன் விடைபெறுவதாகவும், மணி சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் மிக உருக்கமாக ஜெயம் ரவி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அடுக்கடுக்காக எழுந்த கேள்வி

அடுக்கடுக்காக எழுந்த கேள்வி

இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் அதற்கும் முடிந்து விட்டதா, அருள்மொழி வர்மன் எனப்படும் பொன்னியின் செல்வன் கேரக்டரில் மெயின் ரோலில் நடித்து வரும் ஜெயம் ரவியின் பகுதிகளை மட்டும் மணிரத்னம் சீக்கிரம் எடுத்து முடித்து விட்டாரா, கதையின் கடைசி வரை பயணிக்கும் ஹீரோ கேரக்டரின் பகுதி அதற்குள் எப்படி முடியும் என பல விதங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

 மறைமுக அப்டேட் தந்த கார்த்தி

மறைமுக அப்டேட் தந்த கார்த்தி

ஏற்கனவே படம் பற்றிய தகவல்கள் கசிந்து வருவதாக மணிரத்னம் அப்செட்டில் இருக்கிறார். இந்த சமயத்தில் ஜெயம் ரவியின் ட்வீட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் கார்த்தி பதிவிட்ட ட்வீட், படம் பற்றிய பல தகவல்களை சொல்வதாக அமைந்துள்ளது. நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கார்த்தி வெளியிட்ட இந்த ட்வீட்டையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அப்படியெல்லாம் போக முடியாது

அப்படியெல்லாம் போக முடியாது

கார்த்தி தனது ட்வீட்டில், இளவரசே, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக் கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளோ விஷயம் இருக்கா

இவ்வளோ விஷயம் இருக்கா

கார்த்தியின் இந்த ட்வீட்டால் ஜெயம் ரவி நடிக்க வேண்டிய பகுதிகள் இன்னும் மீதமுள்ளதாக தெரிகிறது. அது மட்டுமல்ல பொன்னியின் செல்வன் படக்குழு இன்னும் 6 நாட்களில் மத்திய பிரதேசத்தில் ஷுட்டிங்கை முடித்து விட்டு, தமிழகம் வர உள்ளதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல வந்தியத்தேவன் கேரக்டரில் தான் கார்த்தி நடிக்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது.

இன்னும் இருக்குப்பா

இன்னும் இருக்குப்பா

மத்திய பிரதேசத்தில் நடப்பது தான் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல. தமிழகம் அல்லது தென் மாநிலங்களில் இன்னும் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளது என்பதை சூசகமாக சொல்லி விட்டார் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X