Don't Miss!
- News
தினமும் வீட்டுக்கு போங்க.. எடப்பாடி போட்ட போடு.. டார்கெட் "80000".. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்!
- Sports
ஏய் எப்புட்றா.. பிட்ச் தந்த ட்விஸ்ட்.. முதல் டி20ல் இந்தியா தோற்றது எப்படி??.. 3 முக்கிய காரணங்கள்!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வாரிசுக்கு தான் அதிக தியேட்டர்ஸ்... ரசிகர்கள் நினைத்தது வேறு, நடந்தது வேறு: அப்போ அஜித்தின் துணிவு?
லண்டன்: அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகின்றன.
8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்துக்கு அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மனிதனை மிருகமா மாத்திடும் மணி.. துணிவு செகண்ட் சிங்கிள் 'காசேதான் கடவுளடா’ பாடல் எப்படி இருக்கு?

பரபரக்கும் பொங்கல் ரேஸ்
விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் இருவரது படங்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு, துணிவு படங்களில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களின் ஹைப்பை ஏற்றியுள்ளது. முன்னதாக துணிவு தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயன்ட்ஸும், வரிசு ரைட்ஸை 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதனால், எந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகள் என்ற போட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தில் ராஜூ கொடுத்த தில்லான பேட்டி
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ கொடுத்த பேட்டி ஒன்று, அஜித் ரசிகர்களை சூடாக்கி விட்டது. விஜய் தான் நம்பர் 1 நடிகர், அதனால் வாரிசு படத்துக்கு தான் அதிகமான தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என உதயநிதியிடம் கேட்கப் போவதாக கூறியிருந்தார். இந்த பேட்டி வைரலான அடுத்த சில மணி நேரங்களிலேயே வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை, நார்த் ஆர்க்காடு, சவுத் ஆர்க்காடு பகுதிகளின் தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

வாரிசுக்கு அதிக தியேட்டர்ஸ்
தில் ராஜூவின் பேட்டிக்கு திருப்பூர் சுப்பரமணியம் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே வாரிசு - துணிவு படங்களில் எதற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்ற விவாதம் மீண்டும் வைரலானது. வாரிசு - துணிவு படங்கள் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகவுள்ளதால், தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்படும் என சொல்லப்பட்டது. இது தமிழ்நாட்டின் நிலை என்றால், இன்னொரு பக்கம் விஜய்யின் வாரிசு படத்துக்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடங்கியது அட்வான்ஸ் புக்கிங்
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுக்கான அட்வான்ஸ் புக்கிங், இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. படம் வெளியாவதற்கு 4 வாரங்களுக்கே முன்பே புக்கிங் தொடங்கியதால், ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து முழுவதும் விஜய்யின் வாரிசு படத்திற்கு மொத்தம் 71 ஏரியாக்களில், 98 காட்சிகளுக்காக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். மேலும், இதுவரை 2500க்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் அஜித்தின் துணிவு படத்துக்கு 41 ஏரியாக்களில் மொத்தமே 41 திரைகள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதேபோல் டிக்கெட் புக்கிங்கும் மிகக் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் யூகேவில் உள்ள அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.