அறிவியல் முக்கியம் அமைச்சரே: பிரகாஷ் ராஜ் விளாசல்
Recommended Video

சென்னை: டார்வினின் பரிணாமக் கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் சத்யபால் சிங்கிடம் நடிகர் பிரகாஷ் ராஜ் நறுக்கென்று கேள்வி கேட்டுள்ளார்.
டார்வினின் பரிணாமக் கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். பூமியில் மனிதன் எப்பொழுதுமே மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கில் இருந்து மனிதன் வந்ததாக நம் முன்னோர்கள் தெரிவிக்கவில்லை என்று சிங் கூறியுள்ளார்.
ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.
கேள்வி
குரங்கில் இருந்து மனிதன் வந்ததை நம் முன்னோர்கள் காணவில்லை என்கிறார் அமைச்சர். ஆனால் தற்போது மனிதன் குரங்காக மாறி பழையதை கிளறி கற்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முயற்சிப்பதை உங்களால் மறுக்க முடியுமா சார். சும்மா கேட்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

ஆன்டி அமித் ஷா
பிரகாஷ் ராஜ் அரசியலில்ல இல்லாவிட்டாலும் நாட்டு நடப்புகள் குறித்து மத்திய அரசை விளாசி வருகிறார். அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நான் ஆன்டி இந்து இல்லை. மாறாக ஆன்டி மோடி, ஆன்டி அமித் ஷா என்று கூறினார் அவர்.

ஐ லவ் யூ செல்லம்
சும்மா கேட்கிறேன், சும்மா கேட்கிறேன் என்று ஹேஷ்டேக் போட்டு மத்திய அரசை அவ்வப்போது நறுக் நறுக் என்று கேள்விகள் கேட்கிறார் பிரகாஷ்ராஜ். இதை பார்த்த அவரது ரசிகர்களோ செல்லம், ஐ லவ் யூ செல்லம் என்கிறார்கள்.
பாலிவுட்
பிரேக்கிங்- டார்வின் கோட்பாட்டுக்கு எதிராக குரங்குகள் போராட்டத்தில் குதித்துள்ளன. மனிதர்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று அவை தெரிவித்துள்ளன என பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் சத்யபால் சிங்கை கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











