மாநாடு டிரைலர் எப்போ தான்ப்பா வரும்... சுரேஷ் காமாட்சி அளித்த அசத்தல் பதில்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அரசியல் த்ரில்லர் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் லீட் ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தள்ளிப்போன மாநாடு

தள்ளிப்போன மாநாடு

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படம் ரம்ஜானுக்கே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை, லாக்டவுன், தியேட்டர்கள் மூடல் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இதனால் மாநாடு படம் ஓடிடி.,யில் வெளியாக உள்ளதாக கூட தகவல் பரவியது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

ஆனால் படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்வது என படக்குழு உறுதியாக இருந்தது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாக் கொடுத்த டைரக்டர்

ஷாக் கொடுத்த டைரக்டர்

ரிலீஸ் தேதிக்கு பிறகு மாநாடு படத்தை பற்றிய அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் அப்டேட் கேட்க துவங்கி விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய வெங்கட் பிரபுவிடம் ரசிகர் ஒருவர், டிரைலர் எப்போ வரும் என கேட்டுள்ளார். இதற்கு தவறுதலாக வெங்கட் பிரபு, டிரைலரே வராதுப்பா என பதிலளித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தனது தவறை புரிந்து கொண்ட வெங்கட் பிரபு, மன்னிப்புக் கேட்டு, டிரைலர் வரும்ப்பா என்றார்.

நாளை தேதி அறிவிப்பு

நாளை தேதி அறிவிப்பு

இந்நிலையில் வெங்கட் பிரபுவிடம் கேட்டது போல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடமும் ரசிகர் ஒருவர், டிரைலர் வரும், வரும் என்று தான் சொல்றீங்க. எப்போ வரும்ன்னு ஒரு தேதி சொன்னா நல்லா இருக்கும்ல என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ் காமாட்சி, நாளை தேதியை சொல்லி விடுவோம் என பதிலளித்துள்ளார்.

டிரெண்டிங்கில் மாநாடு

டிரெண்டிங்கில் மாநாடு

தயாரிப்பாளரின் இந்த பதிலால் சிம்பு ரசிகர்கள் குஷியாகி விட்டனர். நாளை டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாவது உறுதியாகி விட்டதால் ட்விட்டரில், மாநாடு டிரைலர் என்ற ஹாஷ்டேகை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த ரிலீசாகும் நாளில் சிம்புவின் மாநாடு ரிலீசாக உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் டிரைலர் வர உள்ளதை ரசிகர்கள் வேற வெலலில் வரவேற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X