கோமாளி படத்தில் அப்படி ட்ரோல் பண்ணியே.. இப்போ பாரு.. பிரதீப் ரங்கநாதனை விளாசும் ரஜினி ரசிகர்கள்!
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றிய ட்ரோல் பல இடங்களில் இடம்பெற்றிருக்கும்.
அப்பவே ரஜினி ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனை விளாசி இருந்தனர். இந்நிலையில், லவ் டுடே படத்தை பார்த்து விட்டு பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கே அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி உள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனை விளாசி வருகின்றனர்.
மேலும், தலைவா ரொம்ப நல்லவனா இருக்காதீங்க என ரஜினிகாந்துக்கும் ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ரஜினியை ட்ரோல் செய்து
பிரதீப் ரங்கநாதனின் முதல் படமான கோமாளி படத்தில் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என பல காலமாக சொல்லி வந்தது குறித்தும், பேத்தி வயது பெண்களுடன் டான்ஸ் ஆடுகிறார் என்றும் ரொம்பவே மோசமான வெளிப்படையான ட்ரோல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் பிரதீப் ரங்கநாதனை அழைத்து ரஜினி பாராட்டி உள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதன் ட்வீட்டுக்கு கீழ் ரஜினி ரசிகர்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளனர்.

பெரிய மனசு
"இன்னா செய்தாரே ஒருத்தர்.. அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்பது போல பிரதீப் ரங்கநாதனை அழைத்து மரியாதை செய்து ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். அவர் மனசே பெரிய மனசு என ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும், பல ரசிகர்களுக்கு இந்த சந்திப்பு வருத்தம் அளிக்கும் விஷயமாகவே மாறி இருக்கிறது.

ரஜினிக்கு அட்வைஸ்
"தலைவா ரொம்ப நல்லவனா இருக்காதீங்க..இது பச்சோந்தி கூட்டம் நிறைந்த உலகம்" என பேட்ட படத்தில் வரும் "நல்லவனா இரு.. ரொம்ப நல்லவனா இருக்காதே" என்கிற போட்டோ மீமையும் போட்டு ரஜினிகந்துக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

ஈட்டி வீசிய கைகள்
"தலைவருக்கு மட்டும் எப்படி தான் இப்படி ஒரு மனசு இருக்கோ?! ஈட்டி வீசிய கைகளை இறுக்கி பிடிக்க ஒரு பக்குவம் வேண்டும். தெய்வமே, ஒன்னும் சொல்ல முடியலை, இது ஞான நிலை, அவ்வளோ தான்!" என இந்த ரசிகர் விரும்பவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் பதிவு போட்டுள்ளார்.

வெட்கமா இல்லை
"கோமாளி படத்துல ரஜினியை கிண்டலடிச்சி இப்ப அவர் கிட்டயே பாராட்டு வாங்குறான்" என விஜய் ரசிகர்களும் ஒன்று திரண்டு பிரதீப் ரங்கநாதனின் ட்வீட்டுக்கு கீழ் அவரை விளாசித் தள்ளி வருகின்றனர். அதே சமயம் ரஜினிகாந்தின் தங்கமான மனசை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











