Thaai Kelavi: எங்கப்பா அனிருத்தை காணோம்.. தனுஷின் ‘தாய்க் கிழவி’ பாட்டு எப்படி இருக்கு?

சென்னை: திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான தாய்க் கிழவி பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

பாட்டு எப்படி இருக்குன்னு பார்க்குறதுக்கு முன்னாடி தனுஷ் மற்றும் அனிருத்தை ஒன்றாக பார்க்க முடியவில்லையே ஏன் என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் DNA இணைந்துள்ளனர் என்றாலும், அனிருத் இல்லாத லிரிக் வீடியோ ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

புரமோவில் அனிருத்

புரமோவில் அனிருத்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடலான தாய்க் கிழவி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் புரமோவில் நடன இயக்குநர் சதீஷ் மற்றும் அனிருத் இடம் பெற்றனர். தாய்க் கிழவி பாடலை புரமோட் செய்ய அந்த வசனத்தை சொன்ன பொன்னம்பலம் கூட இருந்தார் ஆனால், தனுஷை காணவில்லை.

அனிருத் இல்லாத லிரிக் வீடியோ

அனிருத் இல்லாத லிரிக் வீடியோ

ஹலமதி ஹபிபோன்னு விஜய் ஒரு பக்கம் ஆடினாலும், ஜோனிடா காந்தி உடன் ஜோடி போட்டு அழகாக ஆடும் அனிருத்தை இந்த லிரிக் வீடியோவில் காணவில்லையே என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஹெவியாக எழுந்துள்ளது. வழக்கமாக ஹீரோ நடனமாடும் போஸ்டர்களை மட்டுமே காட்டுவார்கள். ஆனால், தி லெஜண்ட் சரவணாவின் வாடி வாசல் பாடல் போல முக்கால் வாசி வீடியோ பாடலையே வெளியிட்டு விட்டனர் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

மீண்டும் பிரச்சனையா

மீண்டும் பிரச்சனையா

தனுஷ் மற்றும் அனிருத் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். DNA காம்போ கம்பேக் ஆகி விட்டது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் இயக்குநர் மட்டும் தான் இருவரிடமும் மாறி மாறி தொடர்பில் இருந்து பாடல்களையும் பிஜிஎம்மையும் உருவாக்கி வருகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தாய்க் கிழவி எப்படி இருக்கு?

தாய்க் கிழவி எப்படி இருக்கு?

தனுஷ் - அனிருத் பஞ்சாயத்தை ஓரமாக வைத்து விட்டு தாய்க் கிழவி பாட்டு எப்படி இருக்குன்னு பார்த்தால் அந்த அளவுக்கு மாஸாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தாய்க் கிழவி என்கிற வார்த்தை கேட்ச்சியாக இருந்தாலும், அதை பயன்படுத்திய விதம் பழைய குத்தாட்ட பாடல்களை தான் நினைவுப்படுத்துகிறது. ஒய் திஸ் கொலவெறி, வாட் எ கருவாடு பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் ஹிட் கூட்டணி கிட்டே இருந்து ரசிகர்கள் இன்னமும் அதிகம் எதிர்பார்த்து விட்டனர் என்று தான்

தோன்றுகிறது.

அக்காவா தோழியா

தனுஷின் அக்காவா இந்த படத்தில் நித்யா மேனன் நடித்துள்ளாரா? அவரது மகள் தான் பிரியா பவானி சங்கரா என்கிற கேள்வியையே இந்த பாடல் எழுப்பி இருக்கிறது. ஆனால், நித்யா மேனன் தோழி என்று தான் தனுஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிமுகம் செய்து வைத்தார். நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரையும் பார்க்க அக்கா தங்கை போலத்தான் இருக்கின்றனர். என்ன ரிலேஷன்ஷிப் என்பது படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானவுடன் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X